• Dec 05 2024

நாமலின் பெயரை பயன்படுத்தி பல இலட்சம் ரூபா நிதி மோசடி - கீதநாத் காசிலிங்கத்தை விசாரணைக்கு அழைத்த பொலிஸார்!

Chithra / Dec 4th 2024, 3:44 pm
image

 பொதுஜன பெரமுன கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம், இன்றையதினம் நிதி மோசடி தொடர்பான விசாரணைகளுக்காக மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டார்.

அந்த கட்சியின் உறுப்பினராக இருந்த ஒருவர், நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி, பலரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல இலட்சம் ரூபா நிதி மோசடி செய்துள்ளார்.

இந்நிலையில் கீதநாத் காசிலிங்கம் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் என்ற ரீதியில் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நிதி மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் அந்த உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை கட்சி மேற்கொண்டு வருவதாக கீதநாத் காசிலிங்கம் தெரிவித்தார்.


நாமலின் பெயரை பயன்படுத்தி பல இலட்சம் ரூபா நிதி மோசடி - கீதநாத் காசிலிங்கத்தை விசாரணைக்கு அழைத்த பொலிஸார்  பொதுஜன பெரமுன கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம், இன்றையதினம் நிதி மோசடி தொடர்பான விசாரணைகளுக்காக மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டார்.அந்த கட்சியின் உறுப்பினராக இருந்த ஒருவர், நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி, பலரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல இலட்சம் ரூபா நிதி மோசடி செய்துள்ளார்.இந்நிலையில் கீதநாத் காசிலிங்கம் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் என்ற ரீதியில் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார்.குறித்த நபர் நிதி மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் அந்த உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை கட்சி மேற்கொண்டு வருவதாக கீதநாத் காசிலிங்கம் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement