• Nov 22 2024

கொழும்பில் தமிழர்களை அச்சுறுத்தும் பொலிஸ்..! - மனோ எம்.பி சபையில் சாடல்

Chithra / Dec 11th 2023, 11:09 am
image

  

கொழும்பில் வசிக்கும் தமிழர்களின் விபரங்களை கோரி வழங்கப்படும் விண்ணப்பங்கள் தமிழில் வழங்கப்படுவதில்லையென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்  சாடியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று  அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பொலிஸார் வழங்கும் விண்ணப்பப் படிவத்தில் பெயர் விபரங்களுடன் சமயம் என்னவென்றும் கேட்கப்படுகிறது.

அப்படியென்றால் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்கவா இதனை கேட்கிறீர்கள்? 

தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த செயற்பாடு நடக்கிறது.

ரணிலின் பொலிஸ் இராச்சியமா? அமைச்சர் டிரானின் பொலிஸ் இராச்சியமா? அல்லது தேசபந்துவின் பொலிஸ் இராச்சியமா இப்போது நடக்கிறதென நான் கேள்வியெழுப்ப விரும்புகிறேன்.

முன்னர் யுத்தம் இருந்ததால் இப்படிச் செய்தீர்கள் என்று கூறப்பட்டது. இப்போது யுத்தம் உள்ளதா? தனிப்பட்ட விபரங்களை கேட்பது எதற்காக? 

எனவே தமிழர்களை இலக்குவைத்து இப்படிச் செய்யவேண்டாம். எனது மக்கள் என்னிடம் கேள்வியெழுப்புகின்றனர். வெள்ளை வான் காலத்தில் கூட உயிர் அச்சுறுத்தலை பொருட்படுத்தாது செயற்பட்ட நாங்கள் இதற்கு பயப்படமாட்டோம். - என்றார்.

கொழும்பில் தமிழர்களை அச்சுறுத்தும் பொலிஸ். - மனோ எம்.பி சபையில் சாடல்   கொழும்பில் வசிக்கும் தமிழர்களின் விபரங்களை கோரி வழங்கப்படும் விண்ணப்பங்கள் தமிழில் வழங்கப்படுவதில்லையென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்  சாடியுள்ளார்.பாராளுமன்றத்தில் இன்று  அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.பொலிஸார் வழங்கும் விண்ணப்பப் படிவத்தில் பெயர் விபரங்களுடன் சமயம் என்னவென்றும் கேட்கப்படுகிறது.அப்படியென்றால் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்கவா இதனை கேட்கிறீர்கள் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த செயற்பாடு நடக்கிறது.ரணிலின் பொலிஸ் இராச்சியமா அமைச்சர் டிரானின் பொலிஸ் இராச்சியமா அல்லது தேசபந்துவின் பொலிஸ் இராச்சியமா இப்போது நடக்கிறதென நான் கேள்வியெழுப்ப விரும்புகிறேன்.முன்னர் யுத்தம் இருந்ததால் இப்படிச் செய்தீர்கள் என்று கூறப்பட்டது. இப்போது யுத்தம் உள்ளதா தனிப்பட்ட விபரங்களை கேட்பது எதற்காக எனவே தமிழர்களை இலக்குவைத்து இப்படிச் செய்யவேண்டாம். எனது மக்கள் என்னிடம் கேள்வியெழுப்புகின்றனர். வெள்ளை வான் காலத்தில் கூட உயிர் அச்சுறுத்தலை பொருட்படுத்தாது செயற்பட்ட நாங்கள் இதற்கு பயப்படமாட்டோம். - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement