• Dec 16 2025

சீறிப் பாய்ந்த மோட்டார் சைக்கிளால் விபரீதம்...! இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு...!samugammedia

dileesiya / Dec 11th 2023, 11:14 am
image

காலி - கொழும்பு வீதியில் ஹிக்கடுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் 27 வயதுடைய இளைஞனொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் மேலும் இரு நண்பர்களுடன் ஹிக்கடுவை நோக்கி மோட்டார் சைக்கிள்களில் பயணித்துள்ளதுடன் அதிக வேகம் காரணமாக மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் இளைஞர் ஹிக்கடுவை வெவல சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் மதில் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

கொழும்பு 10 ஐ வசிப்பிடமாகக் கொண்ட குறித்த இளைஞன் பலத்த காயங்களுடன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

விபத்து தொடர்பான விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

சீறிப் பாய்ந்த மோட்டார் சைக்கிளால் விபரீதம். இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு.samugammedia காலி - கொழும்பு வீதியில் ஹிக்கடுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் 27 வயதுடைய இளைஞனொருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞன் மேலும் இரு நண்பர்களுடன் ஹிக்கடுவை நோக்கி மோட்டார் சைக்கிள்களில் பயணித்துள்ளதுடன் அதிக வேகம் காரணமாக மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் இளைஞர் ஹிக்கடுவை வெவல சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் மதில் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.கொழும்பு 10 ஐ வசிப்பிடமாகக் கொண்ட குறித்த இளைஞன் பலத்த காயங்களுடன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பான விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement