• May 21 2024

காவல்துறை உயர் பதவிகளில் மாற்றம்: 64 பேருக்கு இடமாற்றம் - 19 பேருக்கு பதவி உயர்வு!

Chithra / Jan 4th 2023, 11:53 am
image

Advertisement

7 சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர்கள் மற்றும் ஐந்து பிரதி காவல்துறை மா அதிபர்கள் உட்பட மொத்தம் 64 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், 19 சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள், பிரதி காவல்துறைமா அதிபர்களாக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், காவல்துறைமா அதிபர் சந்தன விக்ரமரத்னவினால் பதவி உயர்தப்பட்டுள்ளனர்.

இடமாற்றம் செய்யப்பட்டவர்கள், தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் (NPC) அனுமதியின் கீழ் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் நிலந்த ஜயவர்தனவை நிர்வாகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் பதவிக்கு நியமிக்க பொதுச் சேவைகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரிய மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய மாகாணத்தில் கடமையாற்றிய சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் எஸ்.சி.மெதவத்த தேசிய காவல்துறை பயிற்சி நிறுவனத்தில் இருந்து துணை சேவைகளுக்கான காவல்துறை தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும், வடமத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவல்துறைமா அதிபர் கித்சிறி ஜயலத் கிழக்கு மாகாணத்திற்கும், கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் எம்.டி.ஆர்.எஸ்.தமிந்த வடமத்திய மாகாணத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ மாகாணத்தின் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபரின் கடமைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், குற்றப்பிரிவு பிரதி காவல்துறைமா அதிபர் பி.லியனகே இடமாற்றம் செய்யப்பட்டு காவல்துறை போதைப்பொருள் பணியகத்துக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, போதைப்பொருள் பணியகத்திலிருந்து பிரதி காவல்துறைமா அதிபர் ஜே.ஏ.யு.பி. ஜெயசிங்க நுவரெலியா வலயத்துக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபராக மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, 23 சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் (SSP), 8 காவல்துறை அத்தியட்சகர்கள் (SP),  இரண்டு பெண் உதவி காவல்துறை அத்தியட்சகர்கள் உள்ளடங்களாக 21 உதவி காவல்துறை அத்தியட்சகர்கள் (ASP)  இடமாற்றம் செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஆறு சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள் பிரதி காவல்துறைமா அதிபர்களாகவும், 13 காவல்துறை அத்தியட்சகர்கள், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

காவல்துறை உயர் பதவிகளில் மாற்றம்: 64 பேருக்கு இடமாற்றம் - 19 பேருக்கு பதவி உயர்வு 7 சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர்கள் மற்றும் ஐந்து பிரதி காவல்துறை மா அதிபர்கள் உட்பட மொத்தம் 64 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.அத்துடன், 19 சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள், பிரதி காவல்துறைமா அதிபர்களாக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், காவல்துறைமா அதிபர் சந்தன விக்ரமரத்னவினால் பதவி உயர்தப்பட்டுள்ளனர்.இடமாற்றம் செய்யப்பட்டவர்கள், தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் (NPC) அனுமதியின் கீழ் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் நிலந்த ஜயவர்தனவை நிர்வாகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் பதவிக்கு நியமிக்க பொதுச் சேவைகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரிய மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.மத்திய மாகாணத்தில் கடமையாற்றிய சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் எஸ்.சி.மெதவத்த தேசிய காவல்துறை பயிற்சி நிறுவனத்தில் இருந்து துணை சேவைகளுக்கான காவல்துறை தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.மேலும், வடமத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவல்துறைமா அதிபர் கித்சிறி ஜயலத் கிழக்கு மாகாணத்திற்கும், கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் எம்.டி.ஆர்.எஸ்.தமிந்த வடமத்திய மாகாணத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.சப்ரகமுவ மாகாணத்தின் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபரின் கடமைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.மேலும், குற்றப்பிரிவு பிரதி காவல்துறைமா அதிபர் பி.லியனகே இடமாற்றம் செய்யப்பட்டு காவல்துறை போதைப்பொருள் பணியகத்துக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, போதைப்பொருள் பணியகத்திலிருந்து பிரதி காவல்துறைமா அதிபர் ஜே.ஏ.யு.பி. ஜெயசிங்க நுவரெலியா வலயத்துக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபராக மாற்றப்பட்டுள்ளார்.இதேவேளை, 23 சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் (SSP), 8 காவல்துறை அத்தியட்சகர்கள் (SP),  இரண்டு பெண் உதவி காவல்துறை அத்தியட்சகர்கள் உள்ளடங்களாக 21 உதவி காவல்துறை அத்தியட்சகர்கள் (ASP)  இடமாற்றம் செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.இதற்கிடையில், ஆறு சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள் பிரதி காவல்துறைமா அதிபர்களாகவும், 13 காவல்துறை அத்தியட்சகர்கள், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement