• Dec 26 2024

போதைப்பொருளை ஒழிப்பதற்கு பொலிஸாருக்கு முழு சுதந்திரம்!- அநுர அரசு அறிவிப்பு

Chithra / Dec 24th 2024, 11:06 am
image

 

போதைப்பொருளை ஒழிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் பொலிஸாருக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே இதனைத் தெரிவித்த அவர்,

புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகம் போதைப்பொருள் கிடங்காக மாறியுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.

புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகம் 2014 ஆம் ஆண்டு  352 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்டது.

தற்போது அங்குள்ள 92 கடைகளில் 80% கடைகள், சேதமடைந்து காணப்படுகின்றது. 

குறிப்பாக அங்குள்ள  மின் விளக்குகள் செயலிழந்து காணப்படுகின்றன.  குறித்த பகுதி அசுத்தமாகக் காணப்படுவதோடு,  துர்நாற்றமும்  வீசி வருகின்றது. 

அத்துடன் அப்பகுதியில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என    சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

போதைப்பொருளை ஒழிப்பதற்கு பொலிஸாருக்கு முழு சுதந்திரம்- அநுர அரசு அறிவிப்பு  போதைப்பொருளை ஒழிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் பொலிஸாருக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே இதனைத் தெரிவித்த அவர்,புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகம் போதைப்பொருள் கிடங்காக மாறியுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகம் 2014 ஆம் ஆண்டு  352 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்டது.தற்போது அங்குள்ள 92 கடைகளில் 80% கடைகள், சேதமடைந்து காணப்படுகின்றது. குறிப்பாக அங்குள்ள  மின் விளக்குகள் செயலிழந்து காணப்படுகின்றன.  குறித்த பகுதி அசுத்தமாகக் காணப்படுவதோடு,  துர்நாற்றமும்  வீசி வருகின்றது. அத்துடன் அப்பகுதியில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என    சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement