• Feb 05 2025

அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை - நீதி அமைச்சர் உறுதிமொழி!

Tamil nila / Dec 5th 2024, 7:25 pm
image

அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு காலம் தாழ்த்தாது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதியளித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சாணக்கியன் எம்.பி. சுட்டிக்காட்டியபோதே, அவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்ற உறுதிமொழியை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வழங்கியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அனைத்து அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள். அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்ற உறுதிமொழி தேர்தல் விஞ்ஞாபனத்திலும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவை பதவியேற்று ஒரு மாத காலப்பகுதிதான் ஆகின்றது. இருந்தாலும் உரிய சட்டத்தரப்புகளுடன் கலந்துரையாடி, கூடிய விரைவில் அரசியல் கைதிகள், சாட்சிகளின்றி நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது. அத்துடன், ஊழல்கள், மோசடிகள் தொடர்பிலும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பந்தமாகவும் நிச்சயம் நடவடிக்கைகள் இடம்பெறும்." - என்றார்.

அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை - நீதி அமைச்சர் உறுதிமொழி அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு காலம் தாழ்த்தாது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதியளித்தார்.நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சாணக்கியன் எம்.பி. சுட்டிக்காட்டியபோதே, அவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்ற உறுதிமொழியை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வழங்கியுள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:-"தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அனைத்து அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள். அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்ற உறுதிமொழி தேர்தல் விஞ்ஞாபனத்திலும் வழங்கப்பட்டுள்ளது.புதிய அமைச்சரவை பதவியேற்று ஒரு மாத காலப்பகுதிதான் ஆகின்றது. இருந்தாலும் உரிய சட்டத்தரப்புகளுடன் கலந்துரையாடி, கூடிய விரைவில் அரசியல் கைதிகள், சாட்சிகளின்றி நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.இதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது. அத்துடன், ஊழல்கள், மோசடிகள் தொடர்பிலும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பந்தமாகவும் நிச்சயம் நடவடிக்கைகள் இடம்பெறும்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement