• Nov 13 2025

அரசியற் தீர்வும் - பொறுப்புக் கூறலும்; ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு!

shanuja / Nov 9th 2025, 8:45 pm
image

சட்டத்துக்கும் கொள்ளைகளுக்குமான யாழ்ப்பாணக் கற்கை மையத்தின் ஒழுங்கமைப்பில் "அரசியற் தீர்வும் - பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு" மற்றும் நாட்டின் தற்போதைய முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பான அவசியமான கலந்துரையாடலையும் ஏற்பாடு செய்துள்ளது. 


இன்று ஞாயிற்றுக்கிழமை (09)  மாலை 4.00 மணி முதல் யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.


குறித்த நிகழ்வில் மூத்த சட்டத்தரணி  K.S இரத்தினவேல் சிறப்புரையாற்றவுள்ளதோடு தொடர்ந்து "தற்போதைய சூழலில் அரசியலமைப்புக்கேட்டின் அரசியல் தீர்வு பற்றித் தமிழரின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும்?" என்ற தலைப்பில், தமிழ் அரசியல் பரப்பில் உள்ள முக்கியத் தலைவர்கள் பங்கேற்கும் ஒரு கலந்துரையாடலாகக் காணப்பட்டது. 


குறித்த நிகழ்வில் சுவிசர்லாந்து தூதரக முதன்மைச் செயலாளர் ஐஸ்ரின், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத் தலைவர். பொ.ஐங்கரநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினான சிவாஜிலிங்கம், செ.கஜேந்திரன், தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளின் உறுப்பினர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள்,  பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.


அரசியற் தீர்வும் - பொறுப்புக் கூறலும்; ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு சட்டத்துக்கும் கொள்ளைகளுக்குமான யாழ்ப்பாணக் கற்கை மையத்தின் ஒழுங்கமைப்பில் "அரசியற் தீர்வும் - பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு" மற்றும் நாட்டின் தற்போதைய முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பான அவசியமான கலந்துரையாடலையும் ஏற்பாடு செய்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை (09)  மாலை 4.00 மணி முதல் யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.குறித்த நிகழ்வில் மூத்த சட்டத்தரணி  K.S இரத்தினவேல் சிறப்புரையாற்றவுள்ளதோடு தொடர்ந்து "தற்போதைய சூழலில் அரசியலமைப்புக்கேட்டின் அரசியல் தீர்வு பற்றித் தமிழரின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும்" என்ற தலைப்பில், தமிழ் அரசியல் பரப்பில் உள்ள முக்கியத் தலைவர்கள் பங்கேற்கும் ஒரு கலந்துரையாடலாகக் காணப்பட்டது. குறித்த நிகழ்வில் சுவிசர்லாந்து தூதரக முதன்மைச் செயலாளர் ஐஸ்ரின், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத் தலைவர். பொ.ஐங்கரநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினான சிவாஜிலிங்கம், செ.கஜேந்திரன், தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளின் உறுப்பினர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள்,  பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement