• Nov 13 2025

பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளி; கடலில் எழுந்த அலைகள் - பதறவைக்கும் காட்சி!

shanuja / Nov 9th 2025, 8:27 pm
image

பிலிப்பைன்ஸில் கல்மேகி சூறாவளி தாக்கிய சந்தர்ப்பத்தில் கடலில் அலை எழும்பும் காட்சி பதறவைத்துள்ளது.  


பிலிப்பைன்ஸை தாக்கியுள்ள கல்மேகி சூறாவளியால் இதுவரையில்  114 பேர் உயிரிழந்துள்ளனர்.


நடப்பாண்டின் மிகவும் சக்திவாய்ந்த சூறாவளியாக இது கருதப்படுகிறது. அந்நாட்டு பிரதமர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் இதனை தேசிய பேரிடராக அறிவித்துள்ளார்.


செபு மாகாணம் தான் இந்த சூறாவளியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் மட்டும் 71 பேர் உயிரிழந்துள்ளனர். 82 பேர் காயமடைந்துள்ளனர், 127 பேர் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


மேலும் 28 உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளதாக செபு மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பிலிப்பைன்ஸில் கல்மேகி சூறாவளி தாக்கப்பட்டதையடுத்து கடல் அலைகள் மோதும் காட்சி பதறவைத்துள்ளது.

பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளி; கடலில் எழுந்த அலைகள் - பதறவைக்கும் காட்சி பிலிப்பைன்ஸில் கல்மேகி சூறாவளி தாக்கிய சந்தர்ப்பத்தில் கடலில் அலை எழும்பும் காட்சி பதறவைத்துள்ளது.  பிலிப்பைன்ஸை தாக்கியுள்ள கல்மேகி சூறாவளியால் இதுவரையில்  114 பேர் உயிரிழந்துள்ளனர்.நடப்பாண்டின் மிகவும் சக்திவாய்ந்த சூறாவளியாக இது கருதப்படுகிறது. அந்நாட்டு பிரதமர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் இதனை தேசிய பேரிடராக அறிவித்துள்ளார்.செபு மாகாணம் தான் இந்த சூறாவளியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் மட்டும் 71 பேர் உயிரிழந்துள்ளனர். 82 பேர் காயமடைந்துள்ளனர், 127 பேர் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மேலும் 28 உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளதாக செபு மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பிலிப்பைன்ஸில் கல்மேகி சூறாவளி தாக்கப்பட்டதையடுத்து கடல் அலைகள் மோதும் காட்சி பதறவைத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement