• Jan 09 2025

தொடரும் அரசியல் பழிவாங்கல்கள்; மொட்டு கட்சி அதிரடி நடவடிக்கை..!

Sharmi / Jan 9th 2025, 8:49 am
image

அரசியல் பழிவாங்கலுக்கு ஆளான மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சட்டத்தரணி அலுவலகம் ஒன்றை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்றையதினம்(08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“இன்று, மக்கள் அன்றாடம் வாழ முடியாமல் சிரமப்படுகின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் நியமிக்கப்பட்ட இந்த அரசு ஆட்சிக்கு வந்தவுடன் எண்ணெய், மின் கட்டணத்தை குறைத்து, அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை சம்பளத்தை உயர்த்தும் என நினைத்தோம். 

இன்று பல இடங்களில் சிறிது சிறிதாக அரசியல் பழிவாங்கலுக்கு பலரும் ஆளாகி வருகின்றனர். 

இது போன்று அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்காக நாளை(09) நெலும் மாவத்தையில் சட்டத்தரணி அலுவலகம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளோம்” என்றார்.


தொடரும் அரசியல் பழிவாங்கல்கள்; மொட்டு கட்சி அதிரடி நடவடிக்கை. அரசியல் பழிவாங்கலுக்கு ஆளான மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சட்டத்தரணி அலுவலகம் ஒன்றை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்றையதினம்(08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,“இன்று, மக்கள் அன்றாடம் வாழ முடியாமல் சிரமப்படுகின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் நியமிக்கப்பட்ட இந்த அரசு ஆட்சிக்கு வந்தவுடன் எண்ணெய், மின் கட்டணத்தை குறைத்து, அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை சம்பளத்தை உயர்த்தும் என நினைத்தோம். இன்று பல இடங்களில் சிறிது சிறிதாக அரசியல் பழிவாங்கலுக்கு பலரும் ஆளாகி வருகின்றனர். இது போன்று அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்காக நாளை(09) நெலும் மாவத்தையில் சட்டத்தரணி அலுவலகம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளோம்” என்றார்.

Advertisement

Advertisement

Advertisement