ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 13 ஆம் திகதி சீனாவுக்கு சென்று அங்கு பொங்கல் பண்டிகை கொண்டாடவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. தைப்பொங்கல் தமிழர்களுக்கு முக்கியமானதாகும். ஆகவே பச்சையரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றை குறைந்த விலைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் சந்திரசேகர் அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாட்டில் சமாதானம் மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் தைரியமாக முதலீடு செய்வார்கள்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தற்போது தீவிரமடைந்துள்ளது. ஆகவே சமூக விரோத செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டு வந்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம்.
அரிசி, தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எதிர்வரும் வாரம் பொங்கல் பண்டிகையை கொண்டாடவுள்ளோம். ஆனால் பச்சையரிசி மற்றும் தேங்காய்க்கான தட்டுப்பாடு காணப்படுகிறது. ஒருகிலோகிராம் பச்சையரிசியை 280 அல்லது 290 ரூபா என்ற அடிப்படையில் வாங்க வேண்டியுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 13 ஆம் திகதி சீனாவுக்கு சென்று அங்கு பொங்கல் பண்டிகை கொண்டாடவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
தைப்பொங்கல் தமிழர்களுக்கு முக்கியமானதாகும். ஆகவே பச்சையரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றை குறைந்த விலைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் சந்திரசேகர் அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும்.
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பாலம் அமைக்கப்பட வேண்டும் என்பதனை பாரதியாரே பாடல் ஒன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு பாலம் அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடும். இலங்கை - இந்தியாவிடையில் 18 கிலோமீற்றர்தான் இடைவெளி. இதில் பாலம் அமைத்தால் நாம் காரிலேயே இந்தியாவுக்கு போய் வரலாம். அதேபோன்று அங்குள்ளவர்களும் இங்கு வந்து போவார்கள்.
இந்திய சுற்றுலாப் பயணிகளே அதிகளவில் இலங்கை வருகின்றனர் . இவ்வாறான நிலையில் பாலம் இரு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைத்தால் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யலாம். எனவே இலங்கை இந்தியாவுக்கிடையில் பாலம் அமைப்பது தொடர்பில் இந்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து முன்னுதாரணமாக செயற்பட வேண்டும்.
அதேவேளை கிளங்கன் வைத்தியசாலையை அரசாங்கம் அபிவிருத்தி செய்ய வேண்டும். ஏற்கனவே இந்தியா இந்த வைத்தியசாலைக்கு உதவியுள்ளது. அரசாங்கத்தினால் இயலாவிட்டால் இந்தியாவிடம் உதவி கோரினால் அவர்கள் தாராளமாக அபிவிருத்தி செய்து தருவார்கள். ஏனெனில் இந்த வைத்தியசாலையை நம்பியே பல்லாயிரக்கணக்கான மக்கள் உள்ளனர்.
அத்துடன் அரசு தற்போது கிளீன் ஸ்ரீலங்கா என்ற பெயரில் சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதன்மூலம் நடைபாதை வியாபாரிகள், பஸ், ஆட்டோக்காரர்கள், இவர்களை நம்பியுள்ள வர்த்தகர்கள் பாதிக்கப்படுகினறனர் . எனவே இது தொடர்பில் அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும். என்றார்.
தைப்பொங்கலை முன்னிட்டு தேங்காய், பச்சை அரிசியின் விலையை குறையுங்கள் - இராதாகிருஸ்ணன் வலியுறுத்தல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 13 ஆம் திகதி சீனாவுக்கு சென்று அங்கு பொங்கல் பண்டிகை கொண்டாடவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. தைப்பொங்கல் தமிழர்களுக்கு முக்கியமானதாகும். ஆகவே பச்சையரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றை குறைந்த விலைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் சந்திரசேகர் அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் உரையாற்றியதாவது,நாட்டில் சமாதானம் மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் தைரியமாக முதலீடு செய்வார்கள்.துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தற்போது தீவிரமடைந்துள்ளது. ஆகவே சமூக விரோத செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டு வந்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம்.அரிசி, தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எதிர்வரும் வாரம் பொங்கல் பண்டிகையை கொண்டாடவுள்ளோம். ஆனால் பச்சையரிசி மற்றும் தேங்காய்க்கான தட்டுப்பாடு காணப்படுகிறது. ஒருகிலோகிராம் பச்சையரிசியை 280 அல்லது 290 ரூபா என்ற அடிப்படையில் வாங்க வேண்டியுள்ளது.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 13 ஆம் திகதி சீனாவுக்கு சென்று அங்கு பொங்கல் பண்டிகை கொண்டாடவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. தைப்பொங்கல் தமிழர்களுக்கு முக்கியமானதாகும். ஆகவே பச்சையரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றை குறைந்த விலைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் சந்திரசேகர் அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும்.இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பாலம் அமைக்கப்பட வேண்டும் என்பதனை பாரதியாரே பாடல் ஒன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு பாலம் அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடும். இலங்கை - இந்தியாவிடையில் 18 கிலோமீற்றர்தான் இடைவெளி. இதில் பாலம் அமைத்தால் நாம் காரிலேயே இந்தியாவுக்கு போய் வரலாம். அதேபோன்று அங்குள்ளவர்களும் இங்கு வந்து போவார்கள்.இந்திய சுற்றுலாப் பயணிகளே அதிகளவில் இலங்கை வருகின்றனர் . இவ்வாறான நிலையில் பாலம் இரு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைத்தால் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யலாம். எனவே இலங்கை இந்தியாவுக்கிடையில் பாலம் அமைப்பது தொடர்பில் இந்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து முன்னுதாரணமாக செயற்பட வேண்டும்.அதேவேளை கிளங்கன் வைத்தியசாலையை அரசாங்கம் அபிவிருத்தி செய்ய வேண்டும். ஏற்கனவே இந்தியா இந்த வைத்தியசாலைக்கு உதவியுள்ளது. அரசாங்கத்தினால் இயலாவிட்டால் இந்தியாவிடம் உதவி கோரினால் அவர்கள் தாராளமாக அபிவிருத்தி செய்து தருவார்கள். ஏனெனில் இந்த வைத்தியசாலையை நம்பியே பல்லாயிரக்கணக்கான மக்கள் உள்ளனர்.அத்துடன் அரசு தற்போது கிளீன் ஸ்ரீலங்கா என்ற பெயரில் சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதன்மூலம் நடைபாதை வியாபாரிகள், பஸ், ஆட்டோக்காரர்கள், இவர்களை நம்பியுள்ள வர்த்தகர்கள் பாதிக்கப்படுகினறனர் . எனவே இது தொடர்பில் அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும். என்றார்.