• Nov 22 2024

ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னரான வன்முறைகள் - மக்களிடம் பெப்ரல் விடுத்துள்ள வேண்டுகோள்

Chithra / Sep 17th 2024, 2:17 pm
image


ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னரான வன்முறைகள் குறித்த பதற்றமடைவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேர்தல் வாக்களிப்பிற்கு பின்னரான வன்முறைகள் குறித்த பதற்றத்திற்கு பலியாக கூடாது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தல் வன்முறைகள் இடம்பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து எங்களிற்கு எந்த தகவலும் கிடைக்கிவில்லை என தெரிவித்துள்ள அவர் வன்முறைகள் அமைதியின்மை குறித்த பல தகவல்கள் உறுதிப்படுத்தப்படாதவை, அதனை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தில் சமூக அமைதியை பேணவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அவர் ஐக்கியத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மதத்தலைவர்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் அரசியல் செயற்பாட்டாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

நாங்கள் அனைவரையும் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டு அமைதியான சூழலிற்கு பங்களிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்,அனைத்து பிரஜைகளும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வது தேர்தல் வேட்பாளர்களின் கௌரவத்திற்கும்,தேர்தல் நடைமுறைக்கும் அவசியமான விடயம் என ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னரான வன்முறைகள் - மக்களிடம் பெப்ரல் விடுத்துள்ள வேண்டுகோள் ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னரான வன்முறைகள் குறித்த பதற்றமடைவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் வேண்டுகோள் விடுத்துள்ளது.தேர்தல் வாக்களிப்பிற்கு பின்னரான வன்முறைகள் குறித்த பதற்றத்திற்கு பலியாக கூடாது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.தேர்தல் வன்முறைகள் இடம்பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து எங்களிற்கு எந்த தகவலும் கிடைக்கிவில்லை என தெரிவித்துள்ள அவர் வன்முறைகள் அமைதியின்மை குறித்த பல தகவல்கள் உறுதிப்படுத்தப்படாதவை, அதனை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என தெரிவித்துள்ளார்.தேர்தல் காலத்தில் சமூக அமைதியை பேணவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அவர் ஐக்கியத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மதத்தலைவர்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் அரசியல் செயற்பாட்டாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.நாங்கள் அனைவரையும் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டு அமைதியான சூழலிற்கு பங்களிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்,அனைத்து பிரஜைகளும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வது தேர்தல் வேட்பாளர்களின் கௌரவத்திற்கும்,தேர்தல் நடைமுறைக்கும் அவசியமான விடயம் என ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement