வாக்களிப்புகள் எவ்வித குளறுபடியும் இன்றி சுமுகமாக இடம்பெற்றன.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மூதூர் பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் மேற்பார்வையின் கீழ் இம் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன.
இதில் மூதூர் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உற்சாகத்துடன் வாக்களிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதை அவதானிக்கமுடிந்தது.
மேலும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், பிரதேச செயலகங்கள் கரைதுரைப்பற்று, புதுக்குடியிருப்பு,
ஒட்டிசுட்டான், துணுக்காய், மாந்தைகிழக்கு, வெலிஓயா ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிலும் முல்லைத்தீவு வலையக்கல்வி பணிமனை,
துணுக்காய் வலயக்கல்வி பணிமனை, பொலிஸ் நிலையங்கள் ராணுவ நிலையங்கள் ஆகிய இடங்களில் தபால் மூல வாக்களிப்புக்கள் இன்றும் நடைபெற்று வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்க 3566 பேர் தகுதியுள்ள நிலையில் வாக்களிப்புக்கள் பொலிசாரின் பாதுகாப்புடன் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் மன்னார் மாவட்டத்தில் அதிகாலை தொடக்கம் வாக்கு பதிவுகள் மந்த கதியில் இடம் பெற்றுவருவதுடன் அரச அதிகாரிகளும் வாக்களிப்பில் ஆர்வம் இல்லாமல் காணப்படும் நிலை காணப்படுவதாக எமது செய்தியார் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் அமைக்கப்பெற்றுள்ள வாக்களிப்பு நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (05) ஆசிரியர்களுக்கான அஞ்சல் வாக்களிப்பு இடம்பெற்றது.
இன்றும் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள். இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்றும் (05) நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்றன.அந்தவகையில் இன்று (05) காலை 8:30 மணிக்கு தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம் பெற்றது.தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி முன்னிலையில் வாக்களிப்புகள் இடம்பெற்றன.சுமார் 112 உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகத்தில் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்திருந்தனர்.அத்துடன் சமூக நீர்வளங்கள் திணைக்களத்தில் இருந்து ஐந்து பேர் பிரதேச செயலகத்தில் வாக்களித்தனர்.மொத்தம் 117 தபால் மூல வாக்காளர்கள் வாக்களிக்க விண்ணப்பித்திருந்தார்கள்.கட்சிகளின் முகவர்கள் இவ்வாக்களிப்பு நிலையங்களில் பிரசன்னமாகி வாக்களிப்பை கண்காணித்திருந்தனர்.வாக்களிப்புகள் எவ்வித குளறுபடியும் இன்றி சுமுகமாக இடம்பெற்றன. இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மூதூர் பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்றது.மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் மேற்பார்வையின் கீழ் இம் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன. இதில் மூதூர் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உற்சாகத்துடன் வாக்களிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதை அவதானிக்கமுடிந்தது. மேலும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், பிரதேச செயலகங்கள் கரைதுரைப்பற்று, புதுக்குடியிருப்பு,ஒட்டிசுட்டான், துணுக்காய், மாந்தைகிழக்கு, வெலிஓயா ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிலும் முல்லைத்தீவு வலையக்கல்வி பணிமனை, துணுக்காய் வலயக்கல்வி பணிமனை, பொலிஸ் நிலையங்கள் ராணுவ நிலையங்கள் ஆகிய இடங்களில் தபால் மூல வாக்களிப்புக்கள் இன்றும் நடைபெற்று வருகின்றது.முல்லைத்தீவு மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்க 3566 பேர் தகுதியுள்ள நிலையில் வாக்களிப்புக்கள் பொலிசாரின் பாதுகாப்புடன் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதுஇந்நிலையில் மன்னார் மாவட்டத்தில் அதிகாலை தொடக்கம் வாக்கு பதிவுகள் மந்த கதியில் இடம் பெற்றுவருவதுடன் அரச அதிகாரிகளும் வாக்களிப்பில் ஆர்வம் இல்லாமல் காணப்படும் நிலை காணப்படுவதாக எமது செய்தியார் தெரிவித்தார். யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் அமைக்கப்பெற்றுள்ள வாக்களிப்பு நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (05) ஆசிரியர்களுக்கான அஞ்சல் வாக்களிப்பு இடம்பெற்றது.