• Jul 23 2025

மூளாய் பகுதியில் தொடரும் பொலிஸ் பாதுகாப்பு; சுற்றிவளைப்பில் மேலும் மூவர் கைது

Chithra / Jul 23rd 2025, 8:25 am
image

 

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை - மூளாய் பகுதியில் இடம்பெற்ற கலவரத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் மூளாய் பகுதி மக்கள் இணைந்து யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் வட்டுக்கோட்டை  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரை அழைத்து விரைந்து கைது நடவடிக்கையை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.

அந்தவகையில் மூளாய் பகுதியைச் சேர்ந்த இருவரும், சங்கரத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவரும் என மூவர், நேற்றிரவு தொடக்கம் இன்று அதிகாலை வரையிலான சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டனர்.

பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர். 

மேலும், மூளாய் பகுதியில் தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலவரத்தை அடக்குவதற்கு பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


மூளாய் பகுதியில் தொடரும் பொலிஸ் பாதுகாப்பு; சுற்றிவளைப்பில் மேலும் மூவர் கைது  யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை - மூளாய் பகுதியில் இடம்பெற்ற கலவரத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றையதினம் மூளாய் பகுதி மக்கள் இணைந்து யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் வட்டுக்கோட்டை  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரை அழைத்து விரைந்து கைது நடவடிக்கையை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.அந்தவகையில் மூளாய் பகுதியைச் சேர்ந்த இருவரும், சங்கரத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவரும் என மூவர், நேற்றிரவு தொடக்கம் இன்று அதிகாலை வரையிலான சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டனர்.பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர். மேலும், மூளாய் பகுதியில் தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலவரத்தை அடக்குவதற்கு பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement