• May 17 2024

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைப்பு?

Sharmi / Feb 10th 2023, 11:05 am
image

Advertisement

உள்ளூராட்சி சபைத் தேர்தலை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கும் அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்று கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீதிமன்றில் இன்று இடம்பெறும்  வழக்கு விசாரணைகளின் பின்னர்  ஒத்திவைப்பு தொடர்பான தகவல்கள் வெளியிடப்படக்கூடும் என்று அந்த வட்டாரங்கள் எதிர்பார்ப்பு வெளியிட்டன.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்தக் கூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவும், உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரிய மனுவும் ஒன்றாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகின்றது.

தேர்தலை சில மாதங்களுக்கு - ஆகக் கூடியது 3 மாதங்களுக்கு ஒத்திவைக் கும் நிலைப்பாட்டுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவும் இணங்கிச் செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் நிலைப்பாடு எடுக்கப்படலாம் என்று தெரியவருகின் றது.

இதேவேளை- இன்றைய தினம் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு பிறிதொரு திக திக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டால் தேர்தலை ஒத்திவைப்பது கடினம் என் றும் கொழும்பு வட்டாரங்கள் சுட்டிக் காட்டின.

ஆயினும் பெரும்பாலும் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கான சாத்தி யங்களே அதிகம் என்று கூறப்படுகின்றது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தலை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கும் அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்று கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.நீதிமன்றில் இன்று இடம்பெறும்  வழக்கு விசாரணைகளின் பின்னர்  ஒத்திவைப்பு தொடர்பான தகவல்கள் வெளியிடப்படக்கூடும் என்று அந்த வட்டாரங்கள் எதிர்பார்ப்பு வெளியிட்டன.உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்தக் கூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவும், உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரிய மனுவும் ஒன்றாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகின்றது.தேர்தலை சில மாதங்களுக்கு - ஆகக் கூடியது 3 மாதங்களுக்கு ஒத்திவைக் கும் நிலைப்பாட்டுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவும் இணங்கிச் செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் நிலைப்பாடு எடுக்கப்படலாம் என்று தெரியவருகின் றது.இதேவேளை- இன்றைய தினம் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு பிறிதொரு திக திக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டால் தேர்தலை ஒத்திவைப்பது கடினம் என் றும் கொழும்பு வட்டாரங்கள் சுட்டிக் காட்டின. ஆயினும் பெரும்பாலும் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கான சாத்தி யங்களே அதிகம் என்று கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement