• May 17 2024

எதிர்காலத்தில் மின்வெட்டு நீடிக்கப்படும்..!

Chithra / Dec 21st 2022, 9:45 am
image

Advertisement

எதிர்காலத்தில் மின்வெட்டு நீடிக்கப்படலாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (செவ்வாய்கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை இதுவரையில் கோரிக்கை விடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்துக்கு அவசியமான நிலக்கரி கிடைக்காமையால் மின் துண்டிப்பு 10 மணித்தியாலங்களுக்கு நீடிக்கக்கூடும் என முன்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மின்சார பொறியியலாளர் சங்கத்தின் உப தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க இந்த எச்சரிக்கையினை விடுத்திருந்தார்.

நிலக்கரி கிடைக்காமையினால், 300 மெகாவோட் மின்சாரம், தேசிய மின் கட்டமைப்புக்கு கிடைக்காமல் போகும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எதிர்காலத்தில் மின்வெட்டு நீடிக்கப்படும். எதிர்காலத்தில் மின்வெட்டு நீடிக்கப்படலாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று (செவ்வாய்கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை இதுவரையில் கோரிக்கை விடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்துக்கு அவசியமான நிலக்கரி கிடைக்காமையால் மின் துண்டிப்பு 10 மணித்தியாலங்களுக்கு நீடிக்கக்கூடும் என முன்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.மின்சார பொறியியலாளர் சங்கத்தின் உப தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க இந்த எச்சரிக்கையினை விடுத்திருந்தார்.நிலக்கரி கிடைக்காமையினால், 300 மெகாவோட் மின்சாரம், தேசிய மின் கட்டமைப்புக்கு கிடைக்காமல் போகும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement