• Jul 01 2024

பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை...!

Anaath / Jun 28th 2024, 7:27 pm
image

Advertisement

தென்னாப்பிரிக்காவில் உள்ள பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் அமெரிக்கப் புவியியல் நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில்,

பெருவின் தெற்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கமானது நள்ளிரவு 12.,36 மணிக்கு ரிக்டர் அளவில் 7.2 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .

அத்துடன் அட்டிகிபா (Atiquipa) மாகாணத்தில் இருந்து 8.8 கிலோ மீட்டர் (5.5 மைல்) தொலைவில் இந்த நடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள பகுதிகளில் வலுவான நடுக்கம் உணரப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், சேதம் குறித்து உடனடி தகவல் வெளியாக வில்லை .

குறித்த  நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். மேலும் நிலநடுக்கதின்போது பதிவான சிசிடிவி காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை. தென்னாப்பிரிக்காவில் உள்ள பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.குறித்த விடயம் தொடர்பில் அமெரிக்கப் புவியியல் நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில்,பெருவின் தெற்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கமானது நள்ளிரவு 12.,36 மணிக்கு ரிக்டர் அளவில் 7.2 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .அத்துடன் அட்டிகிபா (Atiquipa) மாகாணத்தில் இருந்து 8.8 கிலோ மீட்டர் (5.5 மைல்) தொலைவில் இந்த நடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள பகுதிகளில் வலுவான நடுக்கம் உணரப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், சேதம் குறித்து உடனடி தகவல் வெளியாக வில்லை .குறித்த  நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். மேலும் நிலநடுக்கதின்போது பதிவான சிசிடிவி காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement