• Nov 26 2024

யாழில் மருத்துவ விஞ்ஞான நிறுவகத்தில் பயிற்சி பெற்ற தாதியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கிவைப்பு...!

Sharmi / Feb 27th 2024, 2:51 pm
image

யாழ்ப்பாணம் மானிப்பாய் கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மருத்துவ விஞ்ஞான நிறுவகத்தில் பயிற்சி பெற்ற தாதியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கான சான்றிதழ், சீருடை வழங்கும் நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்  தலைமையில் நடைபெற்றது. 

ஆறு மாத NVQ சான்றிதழ் மற்றும் மூன்று வருடங்களுக்கான தாதியர் பயிற்சிகளில் ஈடுபட்டவர்களுக்கான சான்றிதழ்கள்  ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டதுடன் விசேட உரையும் நிகழ்த்தப்பட்டது.

இளைஞர், யுவதிகளுக்கு தற்போது தொழிற்பயிற்சியை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் கல்வி பொதுத்தராதர சாதாரணதரம் மற்றும் உயர்தரம் பரீட்சைகளை நிறைவு செய்த மாணவர்களுக்கும் தொழிற்கல்வி தொடர்பான அறிவூட்டல் மிக முக்கியம் என  ஆளுநர் குறிப்பிட்டார்.

 பெரும்பாலானோருக்கு பல்கலைக்கழக கல்வி கிடைக்காமல் போகும் பட்சத்தில் அவர்களுக்கு தேவையான தொழிற்துறைசார் அறிவு தேவைப்படுகிறது.அந்தவகையில் தொழில்நுட்ப பயிற்சிகளுடன் மொழிசார் பயிற்சிகளும் பெற்றுக்கொடுத்தல் வேண்டும். 

சிறந்த, தகுதியான, ஆளுமைமிக்கவர்களை உருவாக்குதல் தேவை எனவும், ஆசியாவின் முதல் மருத்துவ கல்லூரியாக ஸ்தாபிக்கப்பட்ட யாழ்ப்பாணம் மானிப்பாய் கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மருத்துவ விஞ்ஞான நிறுவகத்தினூடாக இவ்வாறான பயிற்சிகளை பெற்றுக்கொடுப்பதையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாகவும் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

 

யாழில் மருத்துவ விஞ்ஞான நிறுவகத்தில் பயிற்சி பெற்ற தாதியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கிவைப்பு. யாழ்ப்பாணம் மானிப்பாய் கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மருத்துவ விஞ்ஞான நிறுவகத்தில் பயிற்சி பெற்ற தாதியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கான சான்றிதழ், சீருடை வழங்கும் நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்  தலைமையில் நடைபெற்றது. ஆறு மாத NVQ சான்றிதழ் மற்றும் மூன்று வருடங்களுக்கான தாதியர் பயிற்சிகளில் ஈடுபட்டவர்களுக்கான சான்றிதழ்கள்  ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டதுடன் விசேட உரையும் நிகழ்த்தப்பட்டது.இளைஞர், யுவதிகளுக்கு தற்போது தொழிற்பயிற்சியை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் கல்வி பொதுத்தராதர சாதாரணதரம் மற்றும் உயர்தரம் பரீட்சைகளை நிறைவு செய்த மாணவர்களுக்கும் தொழிற்கல்வி தொடர்பான அறிவூட்டல் மிக முக்கியம் என  ஆளுநர் குறிப்பிட்டார். பெரும்பாலானோருக்கு பல்கலைக்கழக கல்வி கிடைக்காமல் போகும் பட்சத்தில் அவர்களுக்கு தேவையான தொழிற்துறைசார் அறிவு தேவைப்படுகிறது.அந்தவகையில் தொழில்நுட்ப பயிற்சிகளுடன் மொழிசார் பயிற்சிகளும் பெற்றுக்கொடுத்தல் வேண்டும். சிறந்த, தகுதியான, ஆளுமைமிக்கவர்களை உருவாக்குதல் தேவை எனவும், ஆசியாவின் முதல் மருத்துவ கல்லூரியாக ஸ்தாபிக்கப்பட்ட யாழ்ப்பாணம் மானிப்பாய் கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மருத்துவ விஞ்ஞான நிறுவகத்தினூடாக இவ்வாறான பயிற்சிகளை பெற்றுக்கொடுப்பதையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாகவும் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement