தைத் திருநாளை முன்னிட்டு கிரி வலம் அறக்கட்டளையினால் பொங்கல் பானை வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் இன்று (09) நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பரந்தன், குமாரபுரம், உமையாள்புரம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 150 குடும்பங்களுக்கு பொங்கல் பானை, பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன், கிளிநொச்சி பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் அதிகாரி, விசுவமடு சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கட்டளை அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான பொங்கல் பொருட்களை வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்கள் பிரதம விருந்தினர் உரையினை நிகழ்த்துகையில் , இன்று (09) பொங்கல் பானை மற்றும் அதற்குரிய பொங்கல் பொருட்பொதிகளை வழங்கி வைக்கும் கிரி வலம் அறக்கட்டளையினருக்கு எமது மாவட்டம், மாவட்ட மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களது சேவைகள் எமது மாவட்டத்திற்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும்.
இன்று (09) குறித்த உதவியை பெற்றுக் கொள்ளும் நீங்கள் முயற்சி உடையவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் இன்று உங்களுக்கு தருகின்றார். எதிர்காலத்தில் நீங்களும் உதவி செய்பவர்களாக இருக்க வேண்டும். இதுவே நீங்கள் இவ் உதவிக்கு செய்யும் நன்றிக் கடனாகும்.
கிரி வலம் அறக்கட்டளையின் ஸ்தாபகருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன், எதிர்கால சிறப்பாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலும் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலகத்தின் நிர்வாக கிராம அலுவலர், கிரி வலம் அறக்கட்டளை நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பரந்தனில் தைத் திருநாளை முன்னிட்டு பொங்கல் பானை வழங்கல் தைத் திருநாளை முன்னிட்டு கிரி வலம் அறக்கட்டளையினால் பொங்கல் பானை வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் இன்று (09) நடைபெற்றது.கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பரந்தன், குமாரபுரம், உமையாள்புரம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 150 குடும்பங்களுக்கு பொங்கல் பானை, பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன், கிளிநொச்சி பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் அதிகாரி, விசுவமடு சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கட்டளை அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான பொங்கல் பொருட்களை வழங்கி வைத்தனர்.இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்கள் பிரதம விருந்தினர் உரையினை நிகழ்த்துகையில் , இன்று (09) பொங்கல் பானை மற்றும் அதற்குரிய பொங்கல் பொருட்பொதிகளை வழங்கி வைக்கும் கிரி வலம் அறக்கட்டளையினருக்கு எமது மாவட்டம், மாவட்ட மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களது சேவைகள் எமது மாவட்டத்திற்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும்.இன்று (09) குறித்த உதவியை பெற்றுக் கொள்ளும் நீங்கள் முயற்சி உடையவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் இன்று உங்களுக்கு தருகின்றார். எதிர்காலத்தில் நீங்களும் உதவி செய்பவர்களாக இருக்க வேண்டும். இதுவே நீங்கள் இவ் உதவிக்கு செய்யும் நன்றிக் கடனாகும்.கிரி வலம் அறக்கட்டளையின் ஸ்தாபகருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன், எதிர்கால சிறப்பாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலும் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலகத்தின் நிர்வாக கிராம அலுவலர், கிரி வலம் அறக்கட்டளை நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.