• Mar 10 2025

பயிர்நிலங்களுக்கான நஷ்டஈடுகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்!

Chithra / Mar 7th 2025, 7:33 am
image

மழை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக கடந்த காலங்களில் ஏற்பட்ட பயிர்ச்செய்கை பாதிப்புக்கான நட்டயீடுகளை விரைவில் வழங்கி முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். 

விவசாய, கால்நடை வளங்கள்,காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

2025 வரவு செலவு திட்ட யோசனையின் ஊடாக விவசாய, கால்நடை வளங்கள்,காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் மற்றும் அந்த ஒதுக்கீடுகளை உரிய வேலைத்திட்டங்களுக்காக பயன்படுத்துவது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. 

விவசாய தரவுகளின் காணப்படும் முழுமையற்ற தன்மையின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட சில தீர்மானங்களில் தவறு ஏற்பட்டதையும் ஜனாதிபதி அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினார். 

விவசாய உற்பத்திகளுக்கு சந்தைக்குள் நியாயமான விலையை பெற்றுக்கொடுப்பதுடன் விவசாயிகளின் 

பாதுகாப்பை போலவே நுகர்வோருக்கும் நியாயம் செய்யப்படும் வகையில் விலைகளை நிர்ணயிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கால்நடை வளங்கள் துறையின் முன்னேற்றத்திற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், ஏற்றுமதி விவசாய பயிர்கள் உக்குவிப்பு, மில்கோ நிறுவனத்தின் முன்னெடுப்பு மற்றும் அதன் முன்னேற்றம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. 

பயிர்நிலங்களுக்கான நஷ்டஈடுகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் மழை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக கடந்த காலங்களில் ஏற்பட்ட பயிர்ச்செய்கை பாதிப்புக்கான நட்டயீடுகளை விரைவில் வழங்கி முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். விவசாய, கால்நடை வளங்கள்,காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 2025 வரவு செலவு திட்ட யோசனையின் ஊடாக விவசாய, கால்நடை வளங்கள்,காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் மற்றும் அந்த ஒதுக்கீடுகளை உரிய வேலைத்திட்டங்களுக்காக பயன்படுத்துவது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. விவசாய தரவுகளின் காணப்படும் முழுமையற்ற தன்மையின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட சில தீர்மானங்களில் தவறு ஏற்பட்டதையும் ஜனாதிபதி அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினார். விவசாய உற்பத்திகளுக்கு சந்தைக்குள் நியாயமான விலையை பெற்றுக்கொடுப்பதுடன் விவசாயிகளின் பாதுகாப்பை போலவே நுகர்வோருக்கும் நியாயம் செய்யப்படும் வகையில் விலைகளை நிர்ணயிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.கால்நடை வளங்கள் துறையின் முன்னேற்றத்திற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், ஏற்றுமதி விவசாய பயிர்கள் உக்குவிப்பு, மில்கோ நிறுவனத்தின் முன்னெடுப்பு மற்றும் அதன் முன்னேற்றம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. 

Advertisement

Advertisement

Advertisement