ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மல்வத்தை மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
இந்த சந்திப்பானது இன்று (25) காலை இடம்பெற்றுள்ளது.
முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மல்வத்து மகாநாயக்கர் திப்பட்டுவாவே சித்தார்த்த சுமங்கலவை சந்தித்து “சிறி தலதா வந்தனம்” மற்றும் அது தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.
அதன் பின்னர் அஸ்கிரி மகா விகாரைக்கு விஜயம் செய்த அநுர , வரகாகொட ஸ்ரீ ஞானரதன அஸ்கிரி மகா நா தேரரை சந்தித்து சிறிது நேரம் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே நிலங்க தெல மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் கலந்து கொண்டனர்.
மல்வத்தை மற்றும் அஸ்கிரி மகாநாயக்கர்களை சந்தித்த ஜனாதிபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மல்வத்தை மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.இந்த சந்திப்பானது இன்று (25) காலை இடம்பெற்றுள்ளது.முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மல்வத்து மகாநாயக்கர் திப்பட்டுவாவே சித்தார்த்த சுமங்கலவை சந்தித்து “சிறி தலதா வந்தனம்” மற்றும் அது தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.அதன் பின்னர் அஸ்கிரி மகா விகாரைக்கு விஜயம் செய்த அநுர , வரகாகொட ஸ்ரீ ஞானரதன அஸ்கிரி மகா நா தேரரை சந்தித்து சிறிது நேரம் கலந்துரையாடினார்.இந்நிகழ்வில் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே நிலங்க தெல மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் கலந்து கொண்டனர்.