• Sep 19 2024

இன வேறுபாடின்றி நாட்டின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்து செயற்படும் ஜனாதிபதி ரணில்- முஷாரப் எம்.பி புகழாரம்...!

Sharmi / Jun 12th 2024, 12:28 pm
image

Advertisement

அண்மையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு தாக்கங்களினால் வீழ்ச்சியடைந்திருந்த  நாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கட்டம் கட்டமாக முன்னிலைக்கு கொண்டுவருவதாகவும் அவர் இன மத பிரதேச வேறுபாடின்றி நாடு என்ற ரீதியில் பணியாற்றி வருவதாகவும் அவரது நிர்வாகத்தின் கீழ் நாட்டை முன்னிலைக்கு கொண்டுசெல்ல முடியும் என காரைதீவு பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களின்  ஒருங்கிணைப்பு குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பிருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் தனது  பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து காரைதீவு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட நிறுவனங்களுக்கும் நிர்மானங்களுக்குமாக  சுமார் பத்து மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதியை ஒதுக்கீடு செய்திருந்தார். 

அதன் ஒரு கட்டமாக சமூக சேவை நிறுவனங்களுக்கும் விளையாட்டு கழகங்களுக்கும் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலக வளாகத்தில் நேற்றைய தினம்(11)  பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்ரன் தலைமையில் இடம்பெற்றது. 

காரைதீவு பிரதேச செயலக திட்டமிடல் உத்தியோகத்தர் பி. ராஜகுலேந்ரனின் நெறிப்படுத்துதலில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பிருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப், பிரதம அதிதியாக கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தார்.

நிகழ்வின்போது காரைதீவு பிரதேச சபை முன்னாள் உப தவிசாளரும், அந்நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் உதவித்தலைவரும் ஜாஹீர் பௌண்டேசன் மற்றும் சமூக அபிவிருத்தி சபையின் ஸ்தாபக தலைவருமான  ஏ.எம். ஜாஹீர், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர்  ஏ.எம். அஷாம் மெளலவி உள்ளிட்ட அதிதிகளும் பிரசன்னமாகியிருந்தனர்.குறித்த நிகழ்வின்போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

நாடு வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த வேளை நாட்டை மீட்ட சிறந்த தலைவராக தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை பார்ப்பதாகவும் அவரது ஆட்சியில் நாட்டை முன்னிலைக்கு கொண்டுசெல்ல முடியும் என்றும் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் வேண்டுகோளின் கீழ் சில பணிகளை காரைதீவு பிரதேச செயலக எல்லைக்குள் செய்ததாகவும் எதிர்காலத்தில் சம்மந்தப்பட்டவர்கள் என்னிடமே தாங்களது குறைகளை நிவர்த்திக்க முடியும் என்றும் தான் எந்த சந்தர்ப்பத்திலும் இன பிரதேச ரீதியாக செயற்படுபவன் இல்லை என்றும் தெரிவித்தார்.


இன வேறுபாடின்றி நாட்டின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்து செயற்படும் ஜனாதிபதி ரணில்- முஷாரப் எம்.பி புகழாரம். அண்மையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு தாக்கங்களினால் வீழ்ச்சியடைந்திருந்த  நாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கட்டம் கட்டமாக முன்னிலைக்கு கொண்டுவருவதாகவும் அவர் இன மத பிரதேச வேறுபாடின்றி நாடு என்ற ரீதியில் பணியாற்றி வருவதாகவும் அவரது நிர்வாகத்தின் கீழ் நாட்டை முன்னிலைக்கு கொண்டுசெல்ல முடியும் என காரைதீவு பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களின்  ஒருங்கிணைப்பு குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பிருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் தனது  பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து காரைதீவு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட நிறுவனங்களுக்கும் நிர்மானங்களுக்குமாக  சுமார் பத்து மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதியை ஒதுக்கீடு செய்திருந்தார். அதன் ஒரு கட்டமாக சமூக சேவை நிறுவனங்களுக்கும் விளையாட்டு கழகங்களுக்கும் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலக வளாகத்தில் நேற்றைய தினம்(11)  பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்ரன் தலைமையில் இடம்பெற்றது. காரைதீவு பிரதேச செயலக திட்டமிடல் உத்தியோகத்தர் பி. ராஜகுலேந்ரனின் நெறிப்படுத்துதலில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பிருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப், பிரதம அதிதியாக கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தார்.நிகழ்வின்போது காரைதீவு பிரதேச சபை முன்னாள் உப தவிசாளரும், அந்நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் உதவித்தலைவரும் ஜாஹீர் பௌண்டேசன் மற்றும் சமூக அபிவிருத்தி சபையின் ஸ்தாபக தலைவருமான  ஏ.எம். ஜாஹீர், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர்  ஏ.எம். அஷாம் மெளலவி உள்ளிட்ட அதிதிகளும் பிரசன்னமாகியிருந்தனர்.குறித்த நிகழ்வின்போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  நாடு வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த வேளை நாட்டை மீட்ட சிறந்த தலைவராக தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை பார்ப்பதாகவும் அவரது ஆட்சியில் நாட்டை முன்னிலைக்கு கொண்டுசெல்ல முடியும் என்றும் தெரிவித்தார்.இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் வேண்டுகோளின் கீழ் சில பணிகளை காரைதீவு பிரதேச செயலக எல்லைக்குள் செய்ததாகவும் எதிர்காலத்தில் சம்மந்தப்பட்டவர்கள் என்னிடமே தாங்களது குறைகளை நிவர்த்திக்க முடியும் என்றும் தான் எந்த சந்தர்ப்பத்திலும் இன பிரதேச ரீதியாக செயற்படுபவன் இல்லை என்றும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement