வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.
உலகப் பொருளாதார மன்றத்தின் 54வது வருடாந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயமாக 13ஆம் திகதி ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்குப் புறப்பட்டார்.
அதன் பின்னர் 18ஆம் திகதி உகாண்டாவிற்குச் சென்ற ஜனாதிபதி 19ஆவது அரச தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.
உகாண்டாவின் கம்பாலாவில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் தலைவர்களின் 19வது உச்சி மாநாடு ஜி77 மற்றும் சீனாவின் 3வது தெற்கு உச்சி மாநாடு ஆகியவற்றிலும் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில் டுபாய் எமிரேட்ஸ் விமான சேவை விமானத்தில் ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் ஜனாதிபதி. வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.உலகப் பொருளாதார மன்றத்தின் 54வது வருடாந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயமாக 13ஆம் திகதி ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்குப் புறப்பட்டார்.அதன் பின்னர் 18ஆம் திகதி உகாண்டாவிற்குச் சென்ற ஜனாதிபதி 19ஆவது அரச தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.உகாண்டாவின் கம்பாலாவில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் தலைவர்களின் 19வது உச்சி மாநாடு ஜி77 மற்றும் சீனாவின் 3வது தெற்கு உச்சி மாநாடு ஆகியவற்றிலும் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்தனர்.இந்நிலையில் டுபாய் எமிரேட்ஸ் விமான சேவை விமானத்தில் ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது