கடன் மறுசீரமைப்பு உள்ளிட் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவரும் நிலையில் பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்வதற்கு ஜனாதிபதி ஒருபோதும் நடவடிக்கை எடுக்கமாட்டார் ன ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
பொதுத் தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சில் சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு இன்னும் காலம் இருக்கிறது.
அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதனால் ஜனாதிபதி தேர்தலே ஆரம்பமாக நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அதேநேரம் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அடுத்த வாரம் பாராளுமன்றம் கூடும்போது நிதி தொடர்பான புதிய சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அனுமதிக்க இருக்கிறது.
அத்துடன் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவிகளை பெற்றுக்கொள்ளல் போன்ற வேலைத்திட்டங்களை இந்த வருடத்துக்குள் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.
அவ்வாறு இருக்கையில் பாராளுமன்றத்தை கலைத்து இந்த நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்க முடியாது.
அதனால் எதிர்க்கட்சியோ அல்லது வேறு யாரும் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்கப்போவதில்லை, என்றார்.
அத்துடன் அரசாங்கம் நிவாரணமாக வழங்கிய அரிசியை உட்கொண்ட கோழிகள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எந்த உண்மை இல்லை என அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்தை குழப்புவதற்காக யாராவது குறித்த அரிசியுடன் வேறு உணவுப்பொருட்களை கோழிகளுக்கு கொடுத்து, அவற்றை இறக்கச் செய்துள்ளதா என்ற சந்தேகம் இருக்கிறது.
அதனால் இது தொடர்பாக விசாரணை நடத்தி அதன் உண்மை தன்மையை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.
ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்கப்போவதில்லை - ஆஷு மாரசிங்க உறுதி கடன் மறுசீரமைப்பு உள்ளிட் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவரும் நிலையில் பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்வதற்கு ஜனாதிபதி ஒருபோதும் நடவடிக்கை எடுக்கமாட்டார் ன ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.பொதுத் தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சில் சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு இன்னும் காலம் இருக்கிறது. அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதனால் ஜனாதிபதி தேர்தலே ஆரம்பமாக நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.அதேநேரம் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அடுத்த வாரம் பாராளுமன்றம் கூடும்போது நிதி தொடர்பான புதிய சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அனுமதிக்க இருக்கிறது. அத்துடன் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவிகளை பெற்றுக்கொள்ளல் போன்ற வேலைத்திட்டங்களை இந்த வருடத்துக்குள் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. அவ்வாறு இருக்கையில் பாராளுமன்றத்தை கலைத்து இந்த நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்க முடியாது. அதனால் எதிர்க்கட்சியோ அல்லது வேறு யாரும் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்கப்போவதில்லை, என்றார்.அத்துடன் அரசாங்கம் நிவாரணமாக வழங்கிய அரிசியை உட்கொண்ட கோழிகள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எந்த உண்மை இல்லை என அவர் தெரிவித்தார். அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்தை குழப்புவதற்காக யாராவது குறித்த அரிசியுடன் வேறு உணவுப்பொருட்களை கோழிகளுக்கு கொடுத்து, அவற்றை இறக்கச் செய்துள்ளதா என்ற சந்தேகம் இருக்கிறது. அதனால் இது தொடர்பாக விசாரணை நடத்தி அதன் உண்மை தன்மையை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.