• Nov 23 2024

நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு!

Chithra / Nov 21st 2024, 12:54 pm
image


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்தபின்னர்  அடுத்த அமர்வுக்காக பாராளுமன்ற அமர்வை டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

இதேவேளை இலங்கை வரலாற்றில் மங்கள வாத்தியங்களம் மற்றம் இராணுவ அணிவகுப்புடனேயே ஜனாதிபதிகள் இதுவரை காலமும் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில், மூன்றில் இரண்டு பெருபான்மையுடன் மக்களால் தெரிவு  செய்யப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தமை  அனைவரையும் வியப்பிற்குள்ளாக்கியுள்ளது.

இந்தநிலையில், படைகள சேவிதர், பிரதி படைகள சேவிதர் மற்றும் உதவி படைகள சேவிதர் ஆகியோர் முன்செல்ல சபாநாயக்கர் மற்றும் செயலாளர் நாயகம் ஆகியோரினால் ஜனாதிபதி நாடாளுமன்ற கட்டடத்திற்குள் அழைத்து செல்லப்பட்டார்.

அத்தோடு,  பிரதமர் ஹரிணி அமரசூரியவும் எவ்வித ஆடம்பர வரவேற்புகளுமின்றி அவைக்குள் அழைத்து செல்லப்பட்டார்.

சபாநாயகர் அசோக ரங்வல்ல மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர ஆகியோரால் பிரதமர் ஹரிணி அமரசூரிய வரவேற்கப்பட்டுள்ளார்.

எவ்வித வாகன பவணியும் இன்றி, மரியாதை அணிவகுப்புக்கள் எதுவுமின்றி மிக எளிமையான முறையில் பிரதமர் அவைக்குள் வரவேற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்தபின்னர்  அடுத்த அமர்வுக்காக பாராளுமன்ற அமர்வை டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.இதேவேளை இலங்கை வரலாற்றில் மங்கள வாத்தியங்களம் மற்றம் இராணுவ அணிவகுப்புடனேயே ஜனாதிபதிகள் இதுவரை காலமும் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.இவ்வாறான சூழ்நிலையில், மூன்றில் இரண்டு பெருபான்மையுடன் மக்களால் தெரிவு  செய்யப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தமை  அனைவரையும் வியப்பிற்குள்ளாக்கியுள்ளது.இந்தநிலையில், படைகள சேவிதர், பிரதி படைகள சேவிதர் மற்றும் உதவி படைகள சேவிதர் ஆகியோர் முன்செல்ல சபாநாயக்கர் மற்றும் செயலாளர் நாயகம் ஆகியோரினால் ஜனாதிபதி நாடாளுமன்ற கட்டடத்திற்குள் அழைத்து செல்லப்பட்டார்.அத்தோடு,  பிரதமர் ஹரிணி அமரசூரியவும் எவ்வித ஆடம்பர வரவேற்புகளுமின்றி அவைக்குள் அழைத்து செல்லப்பட்டார்.சபாநாயகர் அசோக ரங்வல்ல மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர ஆகியோரால் பிரதமர் ஹரிணி அமரசூரிய வரவேற்கப்பட்டுள்ளார்.எவ்வித வாகன பவணியும் இன்றி, மரியாதை அணிவகுப்புக்கள் எதுவுமின்றி மிக எளிமையான முறையில் பிரதமர் அவைக்குள் வரவேற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement