• Oct 30 2024

தமிழர்களின் தீர்வு விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் தம்முடன் இணையவில்லையென ஜனாதிபதி கூறுவது நகைப்பிற்குரியது - சுமந்திரன் ஆதங்கம்!samugammedia

Tamil nila / May 2nd 2023, 7:20 pm
image

Advertisement

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னதாக தமிழர்களின் இனப்பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும் என கூறிய ஜனாதிபதி பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொள்வதும் மட்டுமே நின்றுவிடுவதாகவும் ஆனால்  இந்த விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் முழுவதுமாக அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருவதாகவும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும்  ஜனாதிபதி சட்டத்தரணிமாகிய  எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

இன்றைய  தினம் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், 

ஜனாதிபதி இடம்பெற்ற மே தின கூட்டத்திலே இனபிரைச்சினைகளிற்கான  தீர்வு பற்றி பேசியுள்ளதுடன்  அவர் ஜனாதிபதியாகிய காலத்திலிருந்து அதனை பற்றி பேசி வருகின்றார் என்பதே உண்மை. 

அன்று பாராளுமன்றத்தில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னதாக இனபிரைச்சினையை தீர்த்து வைப்பதற்கு அவர் சம்மதம் கேட்ட பொழுது க மஹிந்த ராஜபக்ஷ கூட 13 வது திருத்தத்திற்கு மேலாக சென்று வைக்கவும் இணக்கம் தெரிவித்திருந்தார். 

அதை தொடர்ந்தே டிசம்பரில் ஜனாதிபதி ஒழுங்கு செய்த சர்வகட்சி மாநாட்டிலும் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்க்கு ஏற்பாடு செய்த 4 கூட்டங்களிலும் நாம் கலந்துகொண்டோம். 

அவை மட்டுமன்றி பெப்ரவரி 4 ஆம் திகதி மீண்டும் ஒரு சர்வ கட்சி மாநாட்டினை கூட்டி அதில் இனப்பிரச்சைனைகளை தீர்ப்பது குறித்த வழிவகைகளையும் கூறியிருந்ததுடன் பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகிய போதும், தனது  கொள்கை விளக்கவுரையிலும் அவற்றையே கூறினார். 

ஆனால், இந்த பிரைச்சினைகளை தீர்த்துவைப்பதற்கு முழுவதுமாக நாம் செயலாற்றுவோம் என்பதை நாட்டுடன் சர்வதேசத்துக்கு வெளிக்காட்டியுள்ளோம். 

தீர்வு பிரைச்சினைகளிற்காக  தமிழ் அரசியல் கட்சிகள் தன்னுடன் ஒன்றிணையவில்லை என கூறுவது நகைப்பிற்குரிய விடயமாகும். 

இந்த பிரைச்சினைகளி தீர்த்து வைப்பதற்கான அனைத்து வழிவகைகளும்  காணப்படுகின்றன. ஆகவே அவர் முதலில் தீர்த்து வைத்தால் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பின்னர் சிந்திப்போம் எனவும் தெரிவித்தார்.


தமிழர்களின் தீர்வு விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் தம்முடன் இணையவில்லையென ஜனாதிபதி கூறுவது நகைப்பிற்குரியது - சுமந்திரன் ஆதங்கம்samugammedia நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னதாக தமிழர்களின் இனப்பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும் என கூறிய ஜனாதிபதி பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொள்வதும் மட்டுமே நின்றுவிடுவதாகவும் ஆனால்  இந்த விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் முழுவதுமாக அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருவதாகவும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும்  ஜனாதிபதி சட்டத்தரணிமாகிய  எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய  தினம் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், ஜனாதிபதி இடம்பெற்ற மே தின கூட்டத்திலே இனபிரைச்சினைகளிற்கான  தீர்வு பற்றி பேசியுள்ளதுடன்  அவர் ஜனாதிபதியாகிய காலத்திலிருந்து அதனை பற்றி பேசி வருகின்றார் என்பதே உண்மை. அன்று பாராளுமன்றத்தில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னதாக இனபிரைச்சினையை தீர்த்து வைப்பதற்கு அவர் சம்மதம் கேட்ட பொழுது க மஹிந்த ராஜபக்ஷ கூட 13 வது திருத்தத்திற்கு மேலாக சென்று வைக்கவும் இணக்கம் தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்தே டிசம்பரில் ஜனாதிபதி ஒழுங்கு செய்த சர்வகட்சி மாநாட்டிலும் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்க்கு ஏற்பாடு செய்த 4 கூட்டங்களிலும் நாம் கலந்துகொண்டோம். அவை மட்டுமன்றி பெப்ரவரி 4 ஆம் திகதி மீண்டும் ஒரு சர்வ கட்சி மாநாட்டினை கூட்டி அதில் இனப்பிரச்சைனைகளை தீர்ப்பது குறித்த வழிவகைகளையும் கூறியிருந்ததுடன் பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகிய போதும், தனது  கொள்கை விளக்கவுரையிலும் அவற்றையே கூறினார். ஆனால், இந்த பிரைச்சினைகளை தீர்த்துவைப்பதற்கு முழுவதுமாக நாம் செயலாற்றுவோம் என்பதை நாட்டுடன் சர்வதேசத்துக்கு வெளிக்காட்டியுள்ளோம். தீர்வு பிரைச்சினைகளிற்காக  தமிழ் அரசியல் கட்சிகள் தன்னுடன் ஒன்றிணையவில்லை என கூறுவது நகைப்பிற்குரிய விடயமாகும். இந்த பிரைச்சினைகளி தீர்த்து வைப்பதற்கான அனைத்து வழிவகைகளும்  காணப்படுகின்றன. ஆகவே அவர் முதலில் தீர்த்து வைத்தால் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பின்னர் சிந்திப்போம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement