• May 17 2024

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கடல்வழி இணைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் நம்பிக்கை samugammedia

Chithra / Oct 15th 2023, 1:59 pm
image

Advertisement

 


காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடான கடல் இணைப்பும், பலாலி விமான நிலையத்தின் ஊடான வான் இணைப்பும் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான பரிவர்த்தனைகளை அதிகரிக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கடல்வழி இணைப்பை ஏற்படுத்தியமை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாகப்பட்டணம் - காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை நேற்று சனிக்கிழமை (14) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது காணொளியூடாக வழங்கிய செய்தியிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் அதிகரிப்பதில் நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை முக்கிய படியாகும். 

இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து இலங்கைக்கும், இலங்கையிலிருந்து இந்தியத் துணைக்கண்டத்துக்கும் பல ஆயிரம் வருடங்களாக பாக்குநீரிணையூடாக மக்கள் பயணித்துக்கொண்டிருந்தனர்.

இதன் ஊடாகவே நமது கலாசார மற்றும் வர்த்தக தொடர்புகள் வளர்ச்சியடைந்தன. 

எவ்வாறிருப்பினும், வடக்கில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இரு நாடுகளுக்கிடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டது. 

எனினும் தற்போது அமைதி திரும்பியுள்ளது. அதற்கமைய மீண்டும் கடல் இணைப்பை ஏற்படுத்துவது குறித்து பிரதமர் மோடியுடன் பேசியிருக்கின்றேன்.

அதற்கமைய இந்த கடல்வழி இணைப்பை ஏற்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்கிற்கும், இந்திய கப்பற்துறை அமைச்சின் ஒத்துழைப்புக்கும் நன்றி கூற விரும்புகின்றேன். 

இனிவரும் நாட்களில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதை காணலாம் என்று நாங்கள் நம்புகிறோம். என்றார். 

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கடல்வழி இணைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் நம்பிக்கை samugammedia  காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடான கடல் இணைப்பும், பலாலி விமான நிலையத்தின் ஊடான வான் இணைப்பும் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான பரிவர்த்தனைகளை அதிகரிக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கடல்வழி இணைப்பை ஏற்படுத்தியமை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.நாகப்பட்டணம் - காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை நேற்று சனிக்கிழமை (14) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது காணொளியூடாக வழங்கிய செய்தியிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் அதிகரிப்பதில் நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை முக்கிய படியாகும். இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து இலங்கைக்கும், இலங்கையிலிருந்து இந்தியத் துணைக்கண்டத்துக்கும் பல ஆயிரம் வருடங்களாக பாக்குநீரிணையூடாக மக்கள் பயணித்துக்கொண்டிருந்தனர்.இதன் ஊடாகவே நமது கலாசார மற்றும் வர்த்தக தொடர்புகள் வளர்ச்சியடைந்தன. எவ்வாறிருப்பினும், வடக்கில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இரு நாடுகளுக்கிடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டது. எனினும் தற்போது அமைதி திரும்பியுள்ளது. அதற்கமைய மீண்டும் கடல் இணைப்பை ஏற்படுத்துவது குறித்து பிரதமர் மோடியுடன் பேசியிருக்கின்றேன்.அதற்கமைய இந்த கடல்வழி இணைப்பை ஏற்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்கிற்கும், இந்திய கப்பற்துறை அமைச்சின் ஒத்துழைப்புக்கும் நன்றி கூற விரும்புகின்றேன். இனிவரும் நாட்களில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதை காணலாம் என்று நாங்கள் நம்புகிறோம். என்றார். 

Advertisement

Advertisement

Advertisement