ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முப்படையினரையும் பலப்படுத்த விரும்புவதுடன் கூட்டுப்படைகளின் தளபதிக்கு மேலும் அதிகாரங்களை வழங்க விரும்புகின்றார்.
வியாழக்கிழமை நாட்டு மக்களிற்கு ஆற்றிய உரையில் அறிவிக்கப்பட்ட இலட்சியமான தேசிய மாற்றம் திட்டத்தை முன்னெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதி இராணுவத்தை பலப்படுத்தவும் கூட்டுப்படைகளின் தளபதிக்கு அதிக அதிகாரங்களை வழங்கவும் விரும்புகின்றார்.
அமைச்சரவை பத்திரவடிவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இராணுவதிட்டத்தினை அமைச்சரவை ஏற்கனவே ஏற்றுகொண்டுள்ளது. சட்டவரைவை உருவாக்குவதற்கு அமைச்சர்கள் அனுமதியளித்துள்ளனர்.
புதிய சட்டமூலம் தொடர்பில் சட்டமாஅதிபரின் பரிந்துரையை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஜனாதிபதியின் பரிந்துரையையும் அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.
ஜனாதிபதியின் புதிய திட்டத்தின் கீழ் பிரதி கூட்டுப்படை தளபதி என்ற பதவியும் உருவாக்கப்படும், எனினும் இந்த பதவி எவ்வாறு உருவாக்கப்படும் என்ற விடயம் அமைச்சரவை பத்திரத்தில் இல்லை.
கூட்டுப்படை தளபதி பாதுகாப்பு செயலாளருடன் இணைந்து பணியாற்றி பாதுகாப்பு படையினருக்கு மூலோபாய அறிவுறுத்தல்களை வழங்குவார்.
பாதுகாப்பு அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ் பாதுகாப்பு செயலாளருடன் இணைந்து கூட்டுப்படை தளபதி இலங்கையின் பாதுகாப்பு படைகளின் எதிர்கால முன்னேற்றம் உட்பட பாதுகாப்பு மூலோபாயத்தை ஏற்படுத்துவார்.
ஆயுதப்படைகளின் திறன் எதிரிகளின் திறனுடன் ஒப்பிடுகையில் எவ்வாறு உள்ளது என்பது குறித்து முப்படைகளின் பிரதானி மதிப்பீடுகளை மேற்கொள்வார்.
ஆயுதப்படையினர் தொடர்பான அவசரநிலை திட்டங்களை தயாரித்து முப்படைகளின் பிரதானி அவற்றை மதிப்பிடுவார்.
ஆயுதப்படைகளின் ஒருங்கிணைந்த - கூட்டுப்பயிற்சிக்கான கொள்கைகளை உருவாக்குவதல் முக்கியமான குறைப்பாடுகள் பற்றிய ஆலோசனைகளை வழங்குதல் மற்றும் பலம் பலவீனங்களை மதிப்பிடுதல் போன்றவற்றில் கூட்டுப்படைகளின் தளபதி ஈடுபடுவார்.
முப்படையினரை பலப்படுத்த ஜனாதிபதி திட்டம் - கூட்டுப்படைக்களின் தளபதிக்கு மேலும் அதிகாரங்கள் samugammedia ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முப்படையினரையும் பலப்படுத்த விரும்புவதுடன் கூட்டுப்படைகளின் தளபதிக்கு மேலும் அதிகாரங்களை வழங்க விரும்புகின்றார்.வியாழக்கிழமை நாட்டு மக்களிற்கு ஆற்றிய உரையில் அறிவிக்கப்பட்ட இலட்சியமான தேசிய மாற்றம் திட்டத்தை முன்னெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதி இராணுவத்தை பலப்படுத்தவும் கூட்டுப்படைகளின் தளபதிக்கு அதிக அதிகாரங்களை வழங்கவும் விரும்புகின்றார்.அமைச்சரவை பத்திரவடிவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இராணுவதிட்டத்தினை அமைச்சரவை ஏற்கனவே ஏற்றுகொண்டுள்ளது. சட்டவரைவை உருவாக்குவதற்கு அமைச்சர்கள் அனுமதியளித்துள்ளனர்.புதிய சட்டமூலம் தொடர்பில் சட்டமாஅதிபரின் பரிந்துரையை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஜனாதிபதியின் பரிந்துரையையும் அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.ஜனாதிபதியின் புதிய திட்டத்தின் கீழ் பிரதி கூட்டுப்படை தளபதி என்ற பதவியும் உருவாக்கப்படும், எனினும் இந்த பதவி எவ்வாறு உருவாக்கப்படும் என்ற விடயம் அமைச்சரவை பத்திரத்தில் இல்லை.கூட்டுப்படை தளபதி பாதுகாப்பு செயலாளருடன் இணைந்து பணியாற்றி பாதுகாப்பு படையினருக்கு மூலோபாய அறிவுறுத்தல்களை வழங்குவார்.பாதுகாப்பு அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ் பாதுகாப்பு செயலாளருடன் இணைந்து கூட்டுப்படை தளபதி இலங்கையின் பாதுகாப்பு படைகளின் எதிர்கால முன்னேற்றம் உட்பட பாதுகாப்பு மூலோபாயத்தை ஏற்படுத்துவார்.ஆயுதப்படைகளின் திறன் எதிரிகளின் திறனுடன் ஒப்பிடுகையில் எவ்வாறு உள்ளது என்பது குறித்து முப்படைகளின் பிரதானி மதிப்பீடுகளை மேற்கொள்வார்.ஆயுதப்படையினர் தொடர்பான அவசரநிலை திட்டங்களை தயாரித்து முப்படைகளின் பிரதானி அவற்றை மதிப்பிடுவார்.ஆயுதப்படைகளின் ஒருங்கிணைந்த - கூட்டுப்பயிற்சிக்கான கொள்கைகளை உருவாக்குவதல் முக்கியமான குறைப்பாடுகள் பற்றிய ஆலோசனைகளை வழங்குதல் மற்றும் பலம் பலவீனங்களை மதிப்பிடுதல் போன்றவற்றில் கூட்டுப்படைகளின் தளபதி ஈடுபடுவார்.