• Nov 26 2024

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு பிரதமர் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்..!

Chithra / Jan 19th 2024, 11:00 am
image

 

பொருளாதாரத்தை பலப்படுத்தும் தீர்மானங்களை எடுக்கும்போது குறைந்த வருமானம் பெறும் மக்களை அரசாங்கம் புறக்கணிக்காது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அஸ்வெசும உதவித்தொகை திட்டத்துக்காக தெரிவு செய்யும் நடவடிக்கைகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன. மேன்முறையீடுகள் தொடர்பான முதல் கட்ட விசாரணை தற்போது நிறைவடைந்துள்ளது.

அதற்கு இணையாக 2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டபடி அதற்கான தொகையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

குறைந்த வருமானம் பெறும் மக்களின் பாதுகாப்புக்காக அரசாங்கம் என்ற வகையில் இந்த இக்கட்டான காலகட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவை எதிர்பார்க்கின்றோம்.

வெளிநாட்டில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்கிறோம். அந்த வகையில் கஷ்டமான நிலைமைக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டதால் வெளிநாடுகளில் இருந்து முட்டைகளை கொண்டு வரவேண்டிய நிலை ஏற்பட்டது. 

ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு வளமான பூமி எங்களிடம் உள்ளது. இந்த வளம் நிறைந்த பூமியில் எது பயிரிடப்பட்டாலும் அது பலனைத் தரும்.

அதற்கான திட்டமிட்ட மற்றும் இலக்குமயப்பட்ட வேலைத்திட்டத்தை  2024இல் சாத்தியப்படுத்த முடியும். என தெரிவித்துள்ளார். 

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு பிரதமர் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்.  பொருளாதாரத்தை பலப்படுத்தும் தீர்மானங்களை எடுக்கும்போது குறைந்த வருமானம் பெறும் மக்களை அரசாங்கம் புறக்கணிக்காது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.மாத்தளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.அஸ்வெசும உதவித்தொகை திட்டத்துக்காக தெரிவு செய்யும் நடவடிக்கைகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன. மேன்முறையீடுகள் தொடர்பான முதல் கட்ட விசாரணை தற்போது நிறைவடைந்துள்ளது.அதற்கு இணையாக 2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டபடி அதற்கான தொகையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.குறைந்த வருமானம் பெறும் மக்களின் பாதுகாப்புக்காக அரசாங்கம் என்ற வகையில் இந்த இக்கட்டான காலகட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவை எதிர்பார்க்கின்றோம்.வெளிநாட்டில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்கிறோம். அந்த வகையில் கஷ்டமான நிலைமைக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டதால் வெளிநாடுகளில் இருந்து முட்டைகளை கொண்டு வரவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு வளமான பூமி எங்களிடம் உள்ளது. இந்த வளம் நிறைந்த பூமியில் எது பயிரிடப்பட்டாலும் அது பலனைத் தரும்.அதற்கான திட்டமிட்ட மற்றும் இலக்குமயப்பட்ட வேலைத்திட்டத்தை  2024இல் சாத்தியப்படுத்த முடியும். என தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement