• Nov 22 2024

இலங்கையில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சிறுவர்களின் ஆபாச படங்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம்!

Chithra / Jan 19th 2024, 10:48 am
image

 

கடந்த ஆண்டில் (2023) மாத்திரம் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், 

அவர்களைக் கைது செய்து விரிவான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்தார்.

பொது பாதுகாப்பு அமைச்சில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்கொடுமை தொடர்பாக ‘ஐஎம்ஏசி’ அமைப்பு மேற்கொண்ட தீவிர ஆய்வின் போது இது தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.

சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் 24 மணித்தியாலமும் இயங்கும் பிரிவு ஒன்றை ஸ்தாபித்துள்ளதாகவும், சிறுவர் துஷ்பிரயோகம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், 

துஷ்பிரயோகம் மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை இந்த பிரிவின் 109 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் இரகசியமாக தெரிவிக்க முடியும் என பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.


இலங்கையில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சிறுவர்களின் ஆபாச படங்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம்  கடந்த ஆண்டில் (2023) மாத்திரம் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்து விரிவான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்தார்.பொது பாதுகாப்பு அமைச்சில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்கொடுமை தொடர்பாக ‘ஐஎம்ஏசி’ அமைப்பு மேற்கொண்ட தீவிர ஆய்வின் போது இது தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் 24 மணித்தியாலமும் இயங்கும் பிரிவு ஒன்றை ஸ்தாபித்துள்ளதாகவும், சிறுவர் துஷ்பிரயோகம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், துஷ்பிரயோகம் மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை இந்த பிரிவின் 109 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் இரகசியமாக தெரிவிக்க முடியும் என பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement