• Oct 30 2024

நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள் தப்பியோட்டம் - பொலிஸார் விசாரணை

Tharun / Jun 29th 2024, 6:47 pm
image

Advertisement

வரக்காபொல துல்ஹிரிய நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இரு கைதிகள் கைவிலங்குகளுடன் தப்பிச் சென்றுள்ளதாக வரக்காபொல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குருவிட்ட சிறைச்சாலையில் உள்ள இரண்டு கைதிகளே இவ்வாறு தப்பிசென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, குறித்த சம்பவமானது நேற்று (28) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், களுத்துறை கோனபொல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய நபரொருவரும் மற்றும் ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய நபரொருவருமே தப்பிசென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தப்பிச் சென்ற இரு கைதிகளுக்கு எதிராக பெல்மடுல்ல, அத்தனகல்ல, ஹொரணை மற்றும் வரக்காபொல ஆகிய நீதிமன்றங்களில் பல வழக்குகள் இருப்பதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள் தப்பியோட்டம் - பொலிஸார் விசாரணை வரக்காபொல துல்ஹிரிய நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இரு கைதிகள் கைவிலங்குகளுடன் தப்பிச் சென்றுள்ளதாக வரக்காபொல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குருவிட்ட சிறைச்சாலையில் உள்ள இரண்டு கைதிகளே இவ்வாறு தப்பிசென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்தோடு, குறித்த சம்பவமானது நேற்று (28) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்தநிலையில், களுத்துறை கோனபொல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய நபரொருவரும் மற்றும் ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய நபரொருவருமே தப்பிசென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தப்பிச் சென்ற இரு கைதிகளுக்கு எதிராக பெல்மடுல்ல, அத்தனகல்ல, ஹொரணை மற்றும் வரக்காபொல ஆகிய நீதிமன்றங்களில் பல வழக்குகள் இருப்பதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement