• Mar 31 2025

இலங்கையில் ஆரம்பமாகவுள்ள தனியார் விமான சேவை..!

Sharmi / Mar 28th 2025, 1:05 pm
image

நாட்டின் முதல் தனியார் விமான நிறுவனத்தின் விமான சேவை எதிர்வரும் 4ஆம் திகதி முதல் செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த விமான சேவை இலங்கையில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஃபிட்ஸ்ஏர் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த விமான நிறுவனம், வணிக மற்றும் சுற்றுலா விமானங்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கும் என்று ஃபிட்ஸ்ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், பயணிகள் மலிவு விலையில் இந்த விமான சேவையைப் பெற முடியும் என்றும் அறிவித்துள்ளது.

நாட்டில் தனியார் விமான நிறுவனம் ஒன்று தொடங்கப்படும் என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில் நாட்டின் முதல் தனியார் விமான சேவை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





இலங்கையில் ஆரம்பமாகவுள்ள தனியார் விமான சேவை. நாட்டின் முதல் தனியார் விமான நிறுவனத்தின் விமான சேவை எதிர்வரும் 4ஆம் திகதி முதல் செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, இந்த விமான சேவை இலங்கையில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.ஃபிட்ஸ்ஏர் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த விமான நிறுவனம், வணிக மற்றும் சுற்றுலா விமானங்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கும் என்று ஃபிட்ஸ்ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது.மேலும், பயணிகள் மலிவு விலையில் இந்த விமான சேவையைப் பெற முடியும் என்றும் அறிவித்துள்ளது.நாட்டில் தனியார் விமான நிறுவனம் ஒன்று தொடங்கப்படும் என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில் நாட்டின் முதல் தனியார் விமான சேவை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now