• Nov 17 2024

கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் - அதிகாரிகளின் செயல் அம்பலம்; வெளியான அறிக்கை

Chithra / Nov 7th 2024, 3:23 pm
image

 

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தற்போதைய உண்மை நிலையை காட்டுவதற்கும், நெருக்கடிக்கு தீர்வு காண எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்படுவதாக  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திணைக்கள உயர் நிர்வாகம் வழங்கிய தவறான தகவல்களே மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை சிரமத்திற்கு உள்ளாக்கியதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரவுகளையும் தகவல்களையும் திணைக்களம்  கொண்டிருந்தாலும், அது அரசாங்கத்தின் முழுப் பங்கில் மூன்றில் ஒரு பங்கை உள்ளடக்கிய மிகவும் பொறுப்பான பாத்திரத்தில் ஈடுபட்டுள்ள விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு  எவ்வளவு கடுமையாக இருந்தாலும்  திணைக்கள அதிகாரிகளால் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவது தொடர்பாக உண்மையான நிலைமை வெளிப்படுத்தாமை வருத்தமளிக்கிறது என்றும் இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கம் கூறுகிறது.

பழைய அரசியல் அதிகாரத்தின் விசுவாசத்தின் அடிப்படையில் பதவிகளைப் பெற்ற சில உயர்மட்ட நபர்களின் தன்னிச்சையான செயற்பாடுகளை பேணுவதன் மூலம் இந்த நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கம் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. 

எனவே, பொதுமக்களை சிரமத்திற்கு உள்ளாக்கிய இதுபோன்ற அதிகாரிகள் யார் என்பதை வெளிப்படுத்துவது சங்கத்தின் பொறுப்பாகும் எனவும், அதற்காக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்க இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கம்  நடவடிக்கை எடுத்த நிலையில், வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு திணைக்கள அதிகாரிகளிடம் வலியுறுத்துவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் - அதிகாரிகளின் செயல் அம்பலம்; வெளியான அறிக்கை  வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.தற்போதைய உண்மை நிலையை காட்டுவதற்கும், நெருக்கடிக்கு தீர்வு காண எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்படுவதாக  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திணைக்கள உயர் நிர்வாகம் வழங்கிய தவறான தகவல்களே மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை சிரமத்திற்கு உள்ளாக்கியதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அனைத்து தரவுகளையும் தகவல்களையும் திணைக்களம்  கொண்டிருந்தாலும், அது அரசாங்கத்தின் முழுப் பங்கில் மூன்றில் ஒரு பங்கை உள்ளடக்கிய மிகவும் பொறுப்பான பாத்திரத்தில் ஈடுபட்டுள்ள விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு  எவ்வளவு கடுமையாக இருந்தாலும்  திணைக்கள அதிகாரிகளால் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவது தொடர்பாக உண்மையான நிலைமை வெளிப்படுத்தாமை வருத்தமளிக்கிறது என்றும் இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கம் கூறுகிறது.பழைய அரசியல் அதிகாரத்தின் விசுவாசத்தின் அடிப்படையில் பதவிகளைப் பெற்ற சில உயர்மட்ட நபர்களின் தன்னிச்சையான செயற்பாடுகளை பேணுவதன் மூலம் இந்த நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கம் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, பொதுமக்களை சிரமத்திற்கு உள்ளாக்கிய இதுபோன்ற அதிகாரிகள் யார் என்பதை வெளிப்படுத்துவது சங்கத்தின் பொறுப்பாகும் எனவும், அதற்காக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்க இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கம்  நடவடிக்கை எடுத்த நிலையில், வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு திணைக்கள அதிகாரிகளிடம் வலியுறுத்துவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement