• Jun 16 2024

கிராம உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் தொழில்சார் நடவடிக்கை கடுமையாகும் – அனுர எச்சரிக்கை

Chithra / May 22nd 2024, 11:51 am
image

Advertisement

 

கிராம உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் தமது தொழில்சார் நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க நாடாளுமன்றில் எச்சரித்துள்ளார்.

கிராம உத்தியோகபூர்வ சேவையை ஸ்தாபிக்காமை, தனித்துவமான சம்பளம் கிடைக்காமை, கிராம உத்தியோகத்தர்களுக்கு தேவையற்ற அழுத்தங்கள் போன்ற பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும், 

கடந்த சில நாட்களாக உத்தியோகபூர்வ விடுமுறை மற்றும் வேலைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிராம உத்தியோகத்தரின் சேவையானது எட்டு மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை எனவும், நீண்டகாலமாக அவர்களது தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கிராம உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் தொழில்சார் நடவடிக்கை கடுமையாகும் – அனுர எச்சரிக்கை  கிராம உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் தமது தொழில்சார் நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க நாடாளுமன்றில் எச்சரித்துள்ளார்.கிராம உத்தியோகபூர்வ சேவையை ஸ்தாபிக்காமை, தனித்துவமான சம்பளம் கிடைக்காமை, கிராம உத்தியோகத்தர்களுக்கு தேவையற்ற அழுத்தங்கள் போன்ற பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும், கடந்த சில நாட்களாக உத்தியோகபூர்வ விடுமுறை மற்றும் வேலைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.கிராம உத்தியோகத்தரின் சேவையானது எட்டு மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை எனவும், நீண்டகாலமாக அவர்களது தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement