• Jun 16 2024

கடலுக்கு செல்ல படகுகளுக்கு அனுமதி இல்லை..! மீனவர்களுக்கு அவசர அறிவித்தல்...!

Chithra / May 22nd 2024, 12:01 pm
image

Advertisement



பல நாள் மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படாது என கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த இதனைத் தெரிவித்தார்.

அடுத்த சில நாட்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

அத்துடன், தற்போது கடற்றொழிலுக்கு சென்றுள்ள பல நாள் மீன்பிடி படகுகளுக்கு  பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.


கடலுக்கு செல்ல படகுகளுக்கு அனுமதி இல்லை. மீனவர்களுக்கு அவசர அறிவித்தல். பல நாள் மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படாது என கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் அறிவித்துள்ளது.இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த இதனைத் தெரிவித்தார்.அடுத்த சில நாட்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.அத்துடன், தற்போது கடற்றொழிலுக்கு சென்றுள்ள பல நாள் மீன்பிடி படகுகளுக்கு  பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement