• Nov 26 2024

நாட்டிற்குள் ஒரு மில்லியன் இளம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்க வேலைத்திட்டம் ஆரம்பம்..!!

Tamil nila / Jan 31st 2024, 8:37 pm
image

நாட்டிற்குள் ஒரு மில்லியன் இளம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா, காணி மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாம் யாருக்கும் சவால் விடுப்பதற்காக பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளவில்லை. நாட்டின் வெற்றிக்காகவே பொறுப்புக்களை ஏற்றோம். அந்த சவாலை முடிந்தளவு வெற்றி கொள்வோம். கடந்த காலத்தில் சுற்றுலா கண்டிருந்த சரிவை சகலரும் அறிவர். அதன் இன்றைய நிலைமை தொடர்பிலும் அனைவரும் அறிவோம். சுற்றுலாத்துறை சடுதியாக அபிவிருத்தி கண்டுள்ளது.

தற்பொழுது கிரிக்கெட் தடையும் நீங்கியுள்ளது. பல வருடங்களுக்கு பின்னர் மேற்கிந்திய அணி அவுஸ்திரேலியாவை தோற்கடித்துள்ளது. அதுபோன்றதொரு எதிர்கால வெற்றியை நோக்கிச் செல்வதே எமது இலக்காகும்.

அது மட்டுமன்றி நாட்டின் இளம் சமூகத்தினரை தொழில் முயற்சியாளர்களாக மாற்றும் வேலைத்திட்டம் ஒன்றும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்கீழ் ஒரு மில்லியன் தொழில் முயற்சியாளர்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் இலங்கை மக்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்கள் அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


நாட்டிற்குள் ஒரு மில்லியன் இளம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்க வேலைத்திட்டம் ஆரம்பம். நாட்டிற்குள் ஒரு மில்லியன் இளம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா, காணி மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.நாம் யாருக்கும் சவால் விடுப்பதற்காக பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளவில்லை. நாட்டின் வெற்றிக்காகவே பொறுப்புக்களை ஏற்றோம். அந்த சவாலை முடிந்தளவு வெற்றி கொள்வோம். கடந்த காலத்தில் சுற்றுலா கண்டிருந்த சரிவை சகலரும் அறிவர். அதன் இன்றைய நிலைமை தொடர்பிலும் அனைவரும் அறிவோம். சுற்றுலாத்துறை சடுதியாக அபிவிருத்தி கண்டுள்ளது.தற்பொழுது கிரிக்கெட் தடையும் நீங்கியுள்ளது. பல வருடங்களுக்கு பின்னர் மேற்கிந்திய அணி அவுஸ்திரேலியாவை தோற்கடித்துள்ளது. அதுபோன்றதொரு எதிர்கால வெற்றியை நோக்கிச் செல்வதே எமது இலக்காகும்.அது மட்டுமன்றி நாட்டின் இளம் சமூகத்தினரை தொழில் முயற்சியாளர்களாக மாற்றும் வேலைத்திட்டம் ஒன்றும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்கீழ் ஒரு மில்லியன் தொழில் முயற்சியாளர்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் இலங்கை மக்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்கள் அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement