• May 13 2024

130 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு!samugammedia

Sharmi / Apr 17th 2023, 1:57 pm
image

Advertisement

அட்டன் - அபோஸ்ட்லி தோட்டத்தின் கௌனிவத்த பிரதேசத்தில் வாழும் 130 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் வேலைத்திட்டம் லிவிங் வோட்டர் எனும் வேலைத்திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டது.

இப்பகுதியில் வாழும் மக்கள் சுத்தமான குடிநீரை பெறுவதில் கடந்த 40 வருடங்களாக பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டனர். விவசாயத்துக்கென அமைக்கப்பட்டிருந்த சிறு கிணறுகளில் இருந்தே நீரை பெற்று வந்தனர். அது சுத்தமான குடிநீராக அமையவில்லை. வேறு வழி இல்லாதததால் அதன் ஊடாகவே நீர்த்தேவையை பூர்த்தி செய்து வந்துள்ளனர்.

இந்நிலையிலேயே அம்மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு, தற்போது வெற்றிகரமாக குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக 1.5. மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

தாம் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினை குறித்து பிரதேச சபை மற்றும் அரசியல்வாதிகளிடம் பல தடவைகள் முறையிட்டு மக்களுக்கு தீர்வு கிட்டவில்லை.

இந்நிலையில் மனித உரிமை செயற்பாட்டாளர் கலாநிதி யோகான் பெரேராவின் தலையீட்டையடுத்து, நீர் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் மயப்படுத்தும் நிகழ்வில் கலாநிதி யோகான் பெரேரா, மதத்தலைவர்கள், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.



130 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்புsamugammedia அட்டன் - அபோஸ்ட்லி தோட்டத்தின் கௌனிவத்த பிரதேசத்தில் வாழும் 130 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் வேலைத்திட்டம் லிவிங் வோட்டர் எனும் வேலைத்திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டது.இப்பகுதியில் வாழும் மக்கள் சுத்தமான குடிநீரை பெறுவதில் கடந்த 40 வருடங்களாக பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டனர். விவசாயத்துக்கென அமைக்கப்பட்டிருந்த சிறு கிணறுகளில் இருந்தே நீரை பெற்று வந்தனர். அது சுத்தமான குடிநீராக அமையவில்லை. வேறு வழி இல்லாதததால் அதன் ஊடாகவே நீர்த்தேவையை பூர்த்தி செய்து வந்துள்ளனர்.இந்நிலையிலேயே அம்மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு, தற்போது வெற்றிகரமாக குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக 1.5. மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.தாம் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினை குறித்து பிரதேச சபை மற்றும் அரசியல்வாதிகளிடம் பல தடவைகள் முறையிட்டு மக்களுக்கு தீர்வு கிட்டவில்லை.இந்நிலையில் மனித உரிமை செயற்பாட்டாளர் கலாநிதி யோகான் பெரேராவின் தலையீட்டையடுத்து, நீர் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.மக்கள் மயப்படுத்தும் நிகழ்வில் கலாநிதி யோகான் பெரேரா, மதத்தலைவர்கள், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement