• Apr 02 2025

தமிழ் பொது வேட்பாளர் கட்டமைப்பின் முக்கிய உறுப்பினர் தென்னிலங்கை வேட்பாளருக்கு ஆதரவு?

Sharmi / Sep 1st 2024, 8:11 pm
image

மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகேயின் ஆதரவு  பிரச்சார  கூட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், அரசியல் உயர் பீட உறுப்பினரும், தமிழ் பொது வேட்பாளர் கட்டமைப்பின் முக்கியஸ்தருமான அருந்தவராஜா கலந்து கொண்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஈ.பி.ஆர்.எல்.எவ்  கட்சி தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், வவுனியா நகரசபை மண்டபத்தில் நுவன் போபகேக்கு ஆதரவான பிரச்சார  கூட்டம் இன்று(01) இடம்பெற்றது.

குறித்த பிரச்சார  கூட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், அரசியல் உயர் பீட உறுப்பினரும் கலந்து கொண்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

குறித்த உறுப்பினரே தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும் பொதுக் கட்டமைப்பில் வவுனியா மாவட்ட நிதி கையாளுகைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டு இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


தமிழ் பொது வேட்பாளர் கட்டமைப்பின் முக்கிய உறுப்பினர் தென்னிலங்கை வேட்பாளருக்கு ஆதரவு மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகேயின் ஆதரவு  பிரச்சார  கூட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், அரசியல் உயர் பீட உறுப்பினரும், தமிழ் பொது வேட்பாளர் கட்டமைப்பின் முக்கியஸ்தருமான அருந்தவராஜா கலந்து கொண்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஈ.பி.ஆர்.எல்.எவ்  கட்சி தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், வவுனியா நகரசபை மண்டபத்தில் நுவன் போபகேக்கு ஆதரவான பிரச்சார  கூட்டம் இன்று(01) இடம்பெற்றது.குறித்த பிரச்சார  கூட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், அரசியல் உயர் பீட உறுப்பினரும் கலந்து கொண்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  குறித்த உறுப்பினரே தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும் பொதுக் கட்டமைப்பில் வவுனியா மாவட்ட நிதி கையாளுகைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டு இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement