• Jan 25 2025

சிறைகளில் இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலைய வலியுத்தி மகஜர் கையளிக்கத் திட்டம்

Thansita / Jan 22nd 2025, 9:48 pm
image

இலங்கைச் சிறைகளில் இருக்கும் அரசியல் கைதிகள் மற்றும் அண்மைய காலங்களில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலையை வலியுறுத்தி  முன்னாள் போராளிகள் நலன்புரிச் சங்கத்தினரால் சேகரிக்கப்பட கையெழுத்துக்களுடன் மகஜர் ஒன்றும் விரைவில் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவிடம் க்சியளிக்கவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் செல்வராடா த்னுவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களுக்கு அவர் மேலும் கூறுகையில் -

வடக்கு கிழக்கை சேர்ந்த பல நூறு மக்களின் ஆததவுடன் கையெழுத்துப் போராட்டம் ஒன்று கடந்த வருடம் டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி வவுனியாவில் ஆரமிக்கப்பட்டு முல்லைத்தீவு வட்டுவாகலில் இம்மாதம் 20 ஆம் திகதி நிறைவு செய்யபட்டது.

 இன்நிலையில் பெறப்பட்ட கையெழுத்துக்களுடன் குறித்த கைதிகளை விரைவில் விடுவிக்க வலியுறுத்தும் மகஜர் ஒன்றும் இணைந்ததாக ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளோம்.

அனுர தலைமையிலான புதிய அரசின் நீதி அமைச்சர் கடந்த சில தினங்களுக்கு முன் அரசியல்க் கைதிகள் யாரும் சிறைகளில் இல்லை என்று கருத்துத் தெரிவித்திருந்ததாகவும் இது அப்பட்டமான பொய்யுரைக்கும் .

முன்பதாக தேர்தல் காலத்தில் அநுரகுமார திசாநாயக்க வவுனியாவில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழ் அரசியலக் கைதிகளை எமது ஆட்சியில் விடுவிப்போம் என்று உரைத்திருந்தார்.

இன்னிலையிலேயே பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும், புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சிறைகளில் இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலைய வலியுத்தி மகஜர் கையளிக்கத் திட்டம் இலங்கைச் சிறைகளில் இருக்கும் அரசியல் கைதிகள் மற்றும் அண்மைய காலங்களில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலையை வலியுறுத்தி  முன்னாள் போராளிகள் நலன்புரிச் சங்கத்தினரால் சேகரிக்கப்பட கையெழுத்துக்களுடன் மகஜர் ஒன்றும் விரைவில் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவிடம் க்சியளிக்கவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் செல்வராடா த்னுவன் தெரிவித்துள்ளார்.இது குறித்து ஊடகங்களுக்கு அவர் மேலும் கூறுகையில் -வடக்கு கிழக்கை சேர்ந்த பல நூறு மக்களின் ஆததவுடன் கையெழுத்துப் போராட்டம் ஒன்று கடந்த வருடம் டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி வவுனியாவில் ஆரமிக்கப்பட்டு முல்லைத்தீவு வட்டுவாகலில் இம்மாதம் 20 ஆம் திகதி நிறைவு செய்யபட்டது. இன்நிலையில் பெறப்பட்ட கையெழுத்துக்களுடன் குறித்த கைதிகளை விரைவில் விடுவிக்க வலியுறுத்தும் மகஜர் ஒன்றும் இணைந்ததாக ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளோம்.அனுர தலைமையிலான புதிய அரசின் நீதி அமைச்சர் கடந்த சில தினங்களுக்கு முன் அரசியல்க் கைதிகள் யாரும் சிறைகளில் இல்லை என்று கருத்துத் தெரிவித்திருந்ததாகவும் இது அப்பட்டமான பொய்யுரைக்கும் .முன்பதாக தேர்தல் காலத்தில் அநுரகுமார திசாநாயக்க வவுனியாவில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழ் அரசியலக் கைதிகளை எமது ஆட்சியில் விடுவிப்போம் என்று உரைத்திருந்தார்.இன்னிலையிலேயே பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும், புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement