• Oct 15 2024

கல்முனை மாநகர சபையின் பட்ஜெட்டுக்கு முன்மொழிவுகள் கோரப்படுகின்றன - என்.எம். நௌபீஸ்

Tharmini / Oct 15th 2024, 2:27 pm
image

Advertisement

கல்முனை மாநகர சபையின் 2025ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்திற்கு பொது மக்களிடம் இருந்து ஆக்கபூர்வமான முன்மொழிவுகள் எதிர்பார்க்கப்படுவதாக மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அறிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் பொது நல அமைப்புகள் மற்றும் பொது மக்கள் எவராயினும் தமது முன்மொழிவுகளை எதிர்வரும் 2024.10.28 ஆம் திகதிக்கு முன்னதாக எழுத்து மூலம் சமர்ப்பிக்க முடியும் எனவும் அதன் பின்னர் சமர்ப்பிக்கப்படும் முன்மொழிவுகளை பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கல்முனை மாநகர சபையின் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தயாரிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

இந்நிலையில், மக்களினதும் பொது அமைப்புகளினதும் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை உள்வாங்கி சிறந்ததொரு சாத்தியப்பாடான பட்ஜெட்டை தயாரித்து, மாநகர சபையை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு முன்மொழிவுகள் கோரப்படுவதாக ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



கல்முனை மாநகர சபையின் பட்ஜெட்டுக்கு முன்மொழிவுகள் கோரப்படுகின்றன - என்.எம். நௌபீஸ் கல்முனை மாநகர சபையின் 2025ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்திற்கு பொது மக்களிடம் இருந்து ஆக்கபூர்வமான முன்மொழிவுகள் எதிர்பார்க்கப்படுவதாக மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அறிவித்துள்ளார்.இதன் பிரகாரம் பொது நல அமைப்புகள் மற்றும் பொது மக்கள் எவராயினும் தமது முன்மொழிவுகளை எதிர்வரும் 2024.10.28 ஆம் திகதிக்கு முன்னதாக எழுத்து மூலம் சமர்ப்பிக்க முடியும் எனவும் அதன் பின்னர் சமர்ப்பிக்கப்படும் முன்மொழிவுகளை பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கல்முனை மாநகர சபையின் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தயாரிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனஇந்நிலையில், மக்களினதும் பொது அமைப்புகளினதும் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை உள்வாங்கி சிறந்ததொரு சாத்தியப்பாடான பட்ஜெட்டை தயாரித்து, மாநகர சபையை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு முன்மொழிவுகள் கோரப்படுவதாக ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement