• May 21 2024

கடலட்டைப் பண்ணை கொட்டில்களுக்குள் விபச்சாரம்: அனுமதி அளித்தது யார்- வர்ணகுலசிங்கம் கேள்வி

Sharmi / Dec 23rd 2022, 2:41 pm
image

Advertisement

நாங்கள் இந்த கடலட்டை சம்மந்தமாகவும் ,தடை செய்யப்பட்ட தொழில்கள் சம்மந்தமாகவும் தொடர்ந்து கத்திக்கொண்டு வருகிறோம். இதில் கடலட்டை தொடர்பாக 3,4 மாதங்களாக கத்திக்கொண்டிருக்கிறோம்.இந்த கடலட்டை  பண்ணைகளை மக்களுக்கு இடைஞ்சல் இல்லாத இடங்களில் அமைக்கலாம் தானே எதற்கு எங்கள் மக்கள் பாரம்பரியமாக தொழில் செய்கின்ற இடங்களில் வந்து செருகிறீர்கள் வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவரும் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சாமசங்களின் சம்மேளன உப தலைவருமான  நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முதலாளித்துவ சலுகைகள் செய்வார்கள் என்ற அடிப்படையில்,கடல் வளங்கள் ,இறால் உற்பத்தி ,மீனின உற்பத்தி ,மக்களின் வாழ்வாதாரங்கள் ஆகியவற்றை அழித்து எங்கோ இருக்கின்ற டாக்டர்,வக்கீல்கள்மற்றும் மின்சார சபையில் இருக்கிறவர்களுக்கும் கொடுத்திருக்கிறீர்கள்.நீங்கள் எங்கே வேண்டும் என்றாலும் கொடுங்கள் ,நாங்கள் இல்லை என்று சொல்லவில்லை ,ஆனால் மக்கள் தொழில் செய்கின்ற இடங்களை கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள் ,இதை தான் நிறுத்துங்கள் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறோம்.

இடுப்பளவு தண்ணீரில் பெண்கள் கடலோரங்களில் இந்த கடலட்டைகளை பிடித்து தங்களின் வாழ்வாதாரத்தை கொண்டு நடத்தினார்கள் .இன்று அதை இல்லாது அழித்து விட்டீர்கள்.இன்று எத்தனையோ தொழிலாளிகளின் வாயிலே மண்ணைப் போட்டு இந்த தொழில்களை செய்கிறீர்கள்.இந்த முதலாளிகள் எங்கே வேண்டும் என்றாலும் கொண்டு போய் தொழிலை செய்யுங்கள்.

இதற்கு யார் அமைப்பதற்கு அனுமதி அளித்தது/ இந்த கடலட்டை கொட்டில்களுக்குள்ளே என்ன நடக்குது என்று யார் பார்க்கிறீர்கள்? இதற்குள் கஞ்சா பதுக்கல்கள்,விபச்சாரம் நடக்கிறது.போதை ஒழிப்பு,மட்டை ஒழிப்பு என்கிறீர்கள் ,ஆனால் இன்று என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள் 

இன்று மக்கள் பொருளாதார நெருக்கடி மத்தியில் சாப்பிட உணவு இல்லாமல் இருக்கிறார்கள் ,அங்கே புயல்,இங்கே காற்று அடிக்கிறது என்று எங்கள் மக்கள் மாத கணக்கில் தொழிலுக்கு போக முடியாமல் உள்ளார்கள் ,இந்த மக்களுக்கு யாராவது ஒருத்தர் ஏதாயினும் கொடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.

இனிமேலும் நீங்கள் அட்டை பண்ணைகளை மக்கள் தொழில் புரிகின்ற இடங்களில் போடுவீர்களாக இருந்தால் வேறு விதமான பிரச்சினைகளை தூண்டலாம்,ஆகவே இதனை உடனடியாக நிறுத்துங்கள்.சகல அதிகாரிகளும் தங்களின் கடமைகளை சரிவர செய்ய்ய வேண்டும் ,நீரியல் வள திணைக்களம் சரியான முறையில் நடவடிக்கை எடுக்குமாக இருந்தால் இன்றைக்கு இங்கு ஒருத்தரும் ஒன்றும் செய்ய இயலாது .

கப்பல் மூழ்கினால் சிங்களவனுக்கு உடனடியாக நிவாரணம் ,தமிழன் எப்படி கத்தினாலும் ஒன்றுமே கிடையாது .வராவர்களும் எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு போகிறார்கள்.இன்று கடற்தொழில் மக்களுக்காக என்ன ஒதுக்கப்பட்டது?ஒன்றுமே இல்லை.கடற்தொழில் மக்களுக்கு கொடுத்தோம் என்று யாராவது சொல்லட்டும் .இன்றை வரையில் எங்கள் மக்களுக்கு என்ன கொடுத்தார்கள்?

உரிய நிறுவனங்கள் எல்லோரும் இறங்கி உடனடியாக இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏன் மௌனம் சாதிக்கிறீர்கள் .உங்கள் கதிரைகள் அப்படியே இருக்கும் ,அதற்கு நீங்கள் பயப்பிட தேவையில்லை ,உடனடியாக உங்கள் சட்டங்களை நடைமுறைப்படுத்துங்கள்.செய்ய இயலாது என்றால் வெளிப்படையாக சொல்லுங்கள்.

நீங்களே சட்டங்களை உருவாக்கி விட்டு அதை நீங்களே கிணற்றில் போடுகிறீர்கள் ,நீங்களும் ஏதும் வாங்கி போட்டு தான் சட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறீரங்களோ ?எங்களால் அப்படி தான் நினைக்க தோன்றுகிறது.தயவு செய்து இதனை கவனத்தில் எடுத்து சரியான முறையில் ஆராய்ச்சி செய்து நடைமுறை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்  என தெரிவித்தார்.

கடலட்டைப் பண்ணை கொட்டில்களுக்குள் விபச்சாரம்: அனுமதி அளித்தது யார்- வர்ணகுலசிங்கம் கேள்வி நாங்கள் இந்த கடலட்டை சம்மந்தமாகவும் ,தடை செய்யப்பட்ட தொழில்கள் சம்மந்தமாகவும் தொடர்ந்து கத்திக்கொண்டு வருகிறோம். இதில் கடலட்டை தொடர்பாக 3,4 மாதங்களாக கத்திக்கொண்டிருக்கிறோம்.இந்த கடலட்டை  பண்ணைகளை மக்களுக்கு இடைஞ்சல் இல்லாத இடங்களில் அமைக்கலாம் தானே எதற்கு எங்கள் மக்கள் பாரம்பரியமாக தொழில் செய்கின்ற இடங்களில் வந்து செருகிறீர்கள் வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவரும் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சாமசங்களின் சம்மேளன உப தலைவருமான  நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,முதலாளித்துவ சலுகைகள் செய்வார்கள் என்ற அடிப்படையில்,கடல் வளங்கள் ,இறால் உற்பத்தி ,மீனின உற்பத்தி ,மக்களின் வாழ்வாதாரங்கள் ஆகியவற்றை அழித்து எங்கோ இருக்கின்ற டாக்டர்,வக்கீல்கள்மற்றும் மின்சார சபையில் இருக்கிறவர்களுக்கும் கொடுத்திருக்கிறீர்கள்.நீங்கள் எங்கே வேண்டும் என்றாலும் கொடுங்கள் ,நாங்கள் இல்லை என்று சொல்லவில்லை ,ஆனால் மக்கள் தொழில் செய்கின்ற இடங்களை கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள் ,இதை தான் நிறுத்துங்கள் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறோம்.இடுப்பளவு தண்ணீரில் பெண்கள் கடலோரங்களில் இந்த கடலட்டைகளை பிடித்து தங்களின் வாழ்வாதாரத்தை கொண்டு நடத்தினார்கள் .இன்று அதை இல்லாது அழித்து விட்டீர்கள்.இன்று எத்தனையோ தொழிலாளிகளின் வாயிலே மண்ணைப் போட்டு இந்த தொழில்களை செய்கிறீர்கள்.இந்த முதலாளிகள் எங்கே வேண்டும் என்றாலும் கொண்டு போய் தொழிலை செய்யுங்கள்.இதற்கு யார் அமைப்பதற்கு அனுமதி அளித்தது/ இந்த கடலட்டை கொட்டில்களுக்குள்ளே என்ன நடக்குது என்று யார் பார்க்கிறீர்கள் இதற்குள் கஞ்சா பதுக்கல்கள்,விபச்சாரம் நடக்கிறது.போதை ஒழிப்பு,மட்டை ஒழிப்பு என்கிறீர்கள் ,ஆனால் இன்று என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள் இன்று மக்கள் பொருளாதார நெருக்கடி மத்தியில் சாப்பிட உணவு இல்லாமல் இருக்கிறார்கள் ,அங்கே புயல்,இங்கே காற்று அடிக்கிறது என்று எங்கள் மக்கள் மாத கணக்கில் தொழிலுக்கு போக முடியாமல் உள்ளார்கள் ,இந்த மக்களுக்கு யாராவது ஒருத்தர் ஏதாயினும் கொடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.இனிமேலும் நீங்கள் அட்டை பண்ணைகளை மக்கள் தொழில் புரிகின்ற இடங்களில் போடுவீர்களாக இருந்தால் வேறு விதமான பிரச்சினைகளை தூண்டலாம்,ஆகவே இதனை உடனடியாக நிறுத்துங்கள்.சகல அதிகாரிகளும் தங்களின் கடமைகளை சரிவர செய்ய்ய வேண்டும் ,நீரியல் வள திணைக்களம் சரியான முறையில் நடவடிக்கை எடுக்குமாக இருந்தால் இன்றைக்கு இங்கு ஒருத்தரும் ஒன்றும் செய்ய இயலாது .கப்பல் மூழ்கினால் சிங்களவனுக்கு உடனடியாக நிவாரணம் ,தமிழன் எப்படி கத்தினாலும் ஒன்றுமே கிடையாது .வராவர்களும் எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு போகிறார்கள்.இன்று கடற்தொழில் மக்களுக்காக என்ன ஒதுக்கப்பட்டதுஒன்றுமே இல்லை.கடற்தொழில் மக்களுக்கு கொடுத்தோம் என்று யாராவது சொல்லட்டும் .இன்றை வரையில் எங்கள் மக்களுக்கு என்ன கொடுத்தார்கள்உரிய நிறுவனங்கள் எல்லோரும் இறங்கி உடனடியாக இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏன் மௌனம் சாதிக்கிறீர்கள் .உங்கள் கதிரைகள் அப்படியே இருக்கும் ,அதற்கு நீங்கள் பயப்பிட தேவையில்லை ,உடனடியாக உங்கள் சட்டங்களை நடைமுறைப்படுத்துங்கள்.செய்ய இயலாது என்றால் வெளிப்படையாக சொல்லுங்கள்.நீங்களே சட்டங்களை உருவாக்கி விட்டு அதை நீங்களே கிணற்றில் போடுகிறீர்கள் ,நீங்களும் ஏதும் வாங்கி போட்டு தான் சட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறீரங்களோ எங்களால் அப்படி தான் நினைக்க தோன்றுகிறது.தயவு செய்து இதனை கவனத்தில் எடுத்து சரியான முறையில் ஆராய்ச்சி செய்து நடைமுறை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்  என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement