பசு வதைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பசுவதை தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் கோரி இன்றையதினம் யாழ்ப்பாணம் - அராலி பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அண்மையில் இரண்டு பசுக்களை கொலை செய்யும் கொலைக் களங்கள் முற்றுகையிட்டு சீல் வைக்கப்பட்டன.
இந்நிலையில் இவ்வாறான சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் குறித்த போராட்டம் அமைந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் "இலங்கை சிவபூமி பசுக்களும் எமது தெய்வங்களே, வெட்டாதே வெட்டாதே கன்றுடன் பசுவை வெட்டாதே, கன்றுத்தாச்சி பசுக்களை வெட்டுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்,
பசுவதை தடைச் சட்டத்தை அமுல்படுத்து, காசாவுக்கு ஒரு நீதி இந்துக்களுக்கு ஒரு நீதியா?" என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் மறவன்புலவு சச்சிதானந்தம், ஊர்காவற்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளர் அன்னலிங்கம் அன்னராசா, மாணவர்கள், இளைஞர் - யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
பசு வதைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் வெடித்த போராட்டம். பசு வதைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பசுவதை தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் கோரி இன்றையதினம் யாழ்ப்பாணம் - அராலி பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.அண்மையில் இரண்டு பசுக்களை கொலை செய்யும் கொலைக் களங்கள் முற்றுகையிட்டு சீல் வைக்கப்பட்டன. இந்நிலையில் இவ்வாறான சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் குறித்த போராட்டம் அமைந்தது.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் "இலங்கை சிவபூமி பசுக்களும் எமது தெய்வங்களே, வெட்டாதே வெட்டாதே கன்றுடன் பசுவை வெட்டாதே, கன்றுத்தாச்சி பசுக்களை வெட்டுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும், பசுவதை தடைச் சட்டத்தை அமுல்படுத்து, காசாவுக்கு ஒரு நீதி இந்துக்களுக்கு ஒரு நீதியா" என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில் மறவன்புலவு சச்சிதானந்தம், ஊர்காவற்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளர் அன்னலிங்கம் அன்னராசா, மாணவர்கள், இளைஞர் - யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.