• May 04 2024

மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயற்படுவோரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் SamugamMedia

Chithra / Mar 21st 2023, 6:23 pm
image

Advertisement

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் நடாத்தவிருந்த மத நிகழ்வொன்றை நிறுத்துமாறு கோரியும் மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயற்படுவோரைக் கண்டித்தும் கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இன்று மாலை 3.30 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக குறித்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு இந்துக்குருமார் ஒஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ க.லோகநாதன் குருக்கள் தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்ககப்பட்டது.

எதிர்வரும் நாட்களில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் கிறிஸ்வத தேவஆராதனை நிகழ்வு வழங்குவதற்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இதன்போது சில கிறிஸ்தவ மத போதகர்களினால் இந்து மதம் தொடர்பாக தரக்குறைவான இழிவுபடுத்தும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் அவை பரப்பப்படுவதாகவும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கண்டித்தே இந்து குருமார்கள் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சில குழுவினரால் மதமாற்ற நடவடிக்கை இடம் பெறுவதாகவும் இதை உடனடியாக தடுத்து நிறுத்த கோரியும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்து தெய்வங்களை இழிவு படுத்தியவர்களை உடனே கைது செய், கட்டாய மதமாற்றத்தை உடன் நிறுத்து, மத ஒற்றுமையை சீர்குலைக்காதே என பல வாசகங்களுடன் போராட்டத்தை நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயற்படுவோரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் SamugamMedia மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் நடாத்தவிருந்த மத நிகழ்வொன்றை நிறுத்துமாறு கோரியும் மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயற்படுவோரைக் கண்டித்தும் கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.இன்று மாலை 3.30 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக குறித்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.கிழக்கு இந்துக்குருமார் ஒஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ க.லோகநாதன் குருக்கள் தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்ககப்பட்டது.எதிர்வரும் நாட்களில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் கிறிஸ்வத தேவஆராதனை நிகழ்வு வழங்குவதற்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.இதன்போது சில கிறிஸ்தவ மத போதகர்களினால் இந்து மதம் தொடர்பாக தரக்குறைவான இழிவுபடுத்தும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் அவை பரப்பப்படுவதாகவும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கண்டித்தே இந்து குருமார்கள் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சில குழுவினரால் மதமாற்ற நடவடிக்கை இடம் பெறுவதாகவும் இதை உடனடியாக தடுத்து நிறுத்த கோரியும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இந்து தெய்வங்களை இழிவு படுத்தியவர்களை உடனே கைது செய், கட்டாய மதமாற்றத்தை உடன் நிறுத்து, மத ஒற்றுமையை சீர்குலைக்காதே என பல வாசகங்களுடன் போராட்டத்தை நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement