நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொம்பன் சாய்ந்த குளம் பகுதியில் உள்ள காணியை உடனடியாக கிராமத்தில் இசை மாலைத்தாழ்வு காணி இல்லாத மக்களுக்கு பகிர்ந்தளித்து வழங்குமாறு கோரி இசைமாளத்தாழ்வு கிராம மக்கள் இன்றைய தினம் புதன்கிழமை (31) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
குறித்த போராட்டம் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொம்பன் சாய்ந்த குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த 46 ஏக்கர் காணியானது வன வள திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் குறித்த காணியை விடுவித்து நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இசைமாலைத்தாழ்வு கிராமத்திற்குற்பட்ட 113 குடும்பங்களுக்கு பகிர்ந்தழிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மேலும், குறித்த பகுதியில் பிறிதொரு கிராமத்தைச் சேர்ந்த இருவர் அத்துமீறி நுழைந்து பல ஏக்கர் காணிகளை அடாத்தாக பிடித்து வருகின்றனர்.
எனவே குறித்த காணியை அவர்களிடம் இருந்து மீட்டு சுமார் 46 ஏக்கர் காணியையும் இசைமாலைத்தாழ்வு கிராம மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்.என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இசை மாலைத்தாழ்வு கிராமத்தில் மக்களுக்கு குடியிருக்க காணி இல்லாத நிலையில் குறித்த கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
ஒரு வீட்டில் இரண்டிற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
எனவே மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் இவ்விடயத்தில் தலையிட்டு நாட்டின் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்து குறித்த காணியை இசைமாலைத்தாழ்வு மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
போராட்டத்தின் பின்னர் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் உதவி மாவட்ட செயலாளர்,உதவி பிரதேச செயலாளர்,மற்றும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் ஆகியோருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
இசைமாலைத்தாழ்வு காணி இல்லாத மக்களுக்கு பகிர்ந்தளித்து வழங்குமாறு கோரி போராட்டம்.samugammedia நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொம்பன் சாய்ந்த குளம் பகுதியில் உள்ள காணியை உடனடியாக கிராமத்தில் இசை மாலைத்தாழ்வு காணி இல்லாத மக்களுக்கு பகிர்ந்தளித்து வழங்குமாறு கோரி இசைமாளத்தாழ்வு கிராம மக்கள் இன்றைய தினம் புதன்கிழமை (31) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.குறித்த போராட்டம் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொம்பன் சாய்ந்த குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த 46 ஏக்கர் காணியானது வன வள திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் குறித்த காணியை விடுவித்து நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இசைமாலைத்தாழ்வு கிராமத்திற்குற்பட்ட 113 குடும்பங்களுக்கு பகிர்ந்தழிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.மேலும், குறித்த பகுதியில் பிறிதொரு கிராமத்தைச் சேர்ந்த இருவர் அத்துமீறி நுழைந்து பல ஏக்கர் காணிகளை அடாத்தாக பிடித்து வருகின்றனர்.எனவே குறித்த காணியை அவர்களிடம் இருந்து மீட்டு சுமார் 46 ஏக்கர் காணியையும் இசைமாலைத்தாழ்வு கிராம மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்.என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுத்தனர். இசை மாலைத்தாழ்வு கிராமத்தில் மக்களுக்கு குடியிருக்க காணி இல்லாத நிலையில் குறித்த கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.ஒரு வீட்டில் இரண்டிற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.எனவே மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் இவ்விடயத்தில் தலையிட்டு நாட்டின் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்து குறித்த காணியை இசைமாலைத்தாழ்வு மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.போராட்டத்தின் பின்னர் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் உதவி மாவட்ட செயலாளர்,உதவி பிரதேச செயலாளர்,மற்றும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் ஆகியோருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.