புதுக்குடியிருப்பில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 55 பயனாளிகளுக்கு இன்றையதினம்(01) உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 55 பயனாளிகளுக்கு ஜேர்மனி வாழ் தமிழ் மக்களின் நிதி பங்களிப்பில் தலா 10,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு மேல்மருத்தூர் ஆதிபராசக்தி மண்டபத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் திலகநாதன் கிந்துஜன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன், உயிரிழை அமைப்பின் தலைவர் கு.கோணேசன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
புதுக்குடியிருப்பில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு. புதுக்குடியிருப்பில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 55 பயனாளிகளுக்கு இன்றையதினம்(01) உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 55 பயனாளிகளுக்கு ஜேர்மனி வாழ் தமிழ் மக்களின் நிதி பங்களிப்பில் தலா 10,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.புதுக்குடியிருப்பு மேல்மருத்தூர் ஆதிபராசக்தி மண்டபத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் திலகநாதன் கிந்துஜன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன், உயிரிழை அமைப்பின் தலைவர் கு.கோணேசன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.