• Feb 08 2025

அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி தொழிலை வழங்கு! திருகோணமலையில் போராட்டம்

Chithra / Feb 8th 2025, 12:54 pm
image

 அரசே அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சம் இன்றி தொழிலை வழங்கு என வலியுறுத்தி திருகோணமலை உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று சனிக்கிழமை  காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனை திருகோணமலை வேலையற்றப் பட்டதாரிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அதிகளவான பட்டதாரிகள் பங்குபற்றிருந்தனர்.

இதன்போது அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சம் இன்றி தொழிலை வழங்கு, வரவு செலவு திட்டத்தில் 35,000 வேலைவாய்ப்பினை பட்டதாரிகளுக்கு வழங்குவதை உறுதி செய், 

படித்து பட்டம் பெற்றும் பதவி இல்லை, வேலை இல்லை என்றால் பல்கலைக்கழகம் எதற்கு, வேண்டாம் வேண்டாம் போட்டி பரீட்சைகள் வேண்டாம் உள்ளிட்ட வாசகங்களை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பப்பட்டு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.   


அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி தொழிலை வழங்கு திருகோணமலையில் போராட்டம்  அரசே அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சம் இன்றி தொழிலை வழங்கு என வலியுறுத்தி திருகோணமலை உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று சனிக்கிழமை  காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.இதனை திருகோணமலை வேலையற்றப் பட்டதாரிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அதிகளவான பட்டதாரிகள் பங்குபற்றிருந்தனர்.இதன்போது அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சம் இன்றி தொழிலை வழங்கு, வரவு செலவு திட்டத்தில் 35,000 வேலைவாய்ப்பினை பட்டதாரிகளுக்கு வழங்குவதை உறுதி செய், படித்து பட்டம் பெற்றும் பதவி இல்லை, வேலை இல்லை என்றால் பல்கலைக்கழகம் எதற்கு, வேண்டாம் வேண்டாம் போட்டி பரீட்சைகள் வேண்டாம் உள்ளிட்ட வாசகங்களை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பப்பட்டு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.   

Advertisement

Advertisement

Advertisement