எமக்கு பட்டதாரிகளுக்கான நியமனங்களை அரச துறையில் வழங்குங்கள் என திருகோணமலை வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்
திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் ஒன்றியத்தின் ஊடக சந்திப்பு இன்று (09) கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது இதன் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் அவர்கள் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எங்களது வேலையில்லா பிரச்சினையை அதிமேதகு ஜனாதிபதி செவிமடுக்க வேண்டும். இது தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசுவதற்காக ஊர் பாராளுமன்ற உறுப்பினர்களையும் நாங்கள் நாடி உள்ளோம்.
இந்த அரசாங்கம் மிக விரைவில் எங்களது வேலையில்ல்லா பிரச்சனையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இந்தப் பிரச்சினையை சரியான முறையில் தீர்க்கா விடின் வீதிக்கு இறங்கிப் போராடுவோம்.
900-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எந்தவிதமான வேலையும் இல்லாமல் வீதிகளிலும் ஏனைய இடங்களிலும் இருக்கின்றார்கள்.
வயது வந்து 35 கழிந்து விட்டது எங்களுக்கு சரியான வேலையை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
35 வயதுக்கு பிறகு நிறுவனங்களிலும் உள்ளீர்ப்பு செய்வதற்கு மிகவும் கடினமாகும் .
உள்வாரி வெளிவாரி வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் என எவ்வித பாகுபாடும் இன்றி எங்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்று தருமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.
பெண்ணுரிமை பெண் சமூகம் பெண்களுக்கான பாதுகாப்பு சகலதையும் வழங்கக்கூடிய ஒரு நாடு அப்படியாக இருந்தும் எங்களுக்கு கிடைக்கப்பெறுகின்ற கால அவகாசம் மிகவும் அதிகமாக இருக்கின்றது
உரிய வயதில் உரிய வேலை வாய்ப்புகளை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனவும் அரசாங்கத்திடம் மேலும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இதன் போது பெரும்பாலான வேலையில்லா பட்டதாரிகளும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேலைவாய்ப்பை உடனடியாக வழங்குங்கள் - வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியம் கோரிக்கை. எமக்கு பட்டதாரிகளுக்கான நியமனங்களை அரச துறையில் வழங்குங்கள் என திருகோணமலை வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர் திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் ஒன்றியத்தின் ஊடக சந்திப்பு இன்று (09) கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது இதன் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.குறித்த விடயம் தொடர்பில் அவர்கள் தொடர்ந்தும் தெரிவிக்கையில், எங்களது வேலையில்லா பிரச்சினையை அதிமேதகு ஜனாதிபதி செவிமடுக்க வேண்டும். இது தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசுவதற்காக ஊர் பாராளுமன்ற உறுப்பினர்களையும் நாங்கள் நாடி உள்ளோம்.இந்த அரசாங்கம் மிக விரைவில் எங்களது வேலையில்ல்லா பிரச்சனையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இந்தப் பிரச்சினையை சரியான முறையில் தீர்க்கா விடின் வீதிக்கு இறங்கிப் போராடுவோம். 900-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எந்தவிதமான வேலையும் இல்லாமல் வீதிகளிலும் ஏனைய இடங்களிலும் இருக்கின்றார்கள். வயது வந்து 35 கழிந்து விட்டது எங்களுக்கு சரியான வேலையை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.35 வயதுக்கு பிறகு நிறுவனங்களிலும் உள்ளீர்ப்பு செய்வதற்கு மிகவும் கடினமாகும் .உள்வாரி வெளிவாரி வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் என எவ்வித பாகுபாடும் இன்றி எங்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்று தருமாறு கோரிக்கை விடுக்கின்றோம். பெண்ணுரிமை பெண் சமூகம் பெண்களுக்கான பாதுகாப்பு சகலதையும் வழங்கக்கூடிய ஒரு நாடு அப்படியாக இருந்தும் எங்களுக்கு கிடைக்கப்பெறுகின்ற கால அவகாசம் மிகவும் அதிகமாக இருக்கின்றது உரிய வயதில் உரிய வேலை வாய்ப்புகளை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனவும் அரசாங்கத்திடம் மேலும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.இதன் போது பெரும்பாலான வேலையில்லா பட்டதாரிகளும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.