விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை அமுல்படுத்தும் வகையில் பதில் பொலிஸ் மா அதிபரின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளன.
அப்பணிப்பின் கீழ் விசேட போதை பொருள் ஒழிப்பு குழு ஒன்றை அமைத்து அக் குழுவின் ஊடாக பொதுமக்களுக்கு விழிப்பூட்டல்களை வழங்கவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பதற்குமான கலந்துரையாடல் நேற்றையதினம்(17) மாலை சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதுடன் போதைப்பொருள் தொடர்பில் உறுதியான தகவல்களை பொலிஸாருக்கு வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் பள்ளிவாசல் நிர்வாகிகள் , அரச உத்தியோகத்தர்கள், பொலிஸ் ஆலோசனைக் குழவினர், சமூக சேவகர்கள் என பலரும் கலந்து கொண்டு தத்தமது ஆலோசனைகளை குறிப்பிட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
பொதுமக்கள் அச்சமின்றி போதை பொருள் தொடர்பான தகவல்களை வழங்குங்கள். பொலிஸார் வேண்டுகோள்.samugammedia விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை அமுல்படுத்தும் வகையில் பதில் பொலிஸ் மா அதிபரின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளன.அப்பணிப்பின் கீழ் விசேட போதை பொருள் ஒழிப்பு குழு ஒன்றை அமைத்து அக் குழுவின் ஊடாக பொதுமக்களுக்கு விழிப்பூட்டல்களை வழங்கவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பதற்குமான கலந்துரையாடல் நேற்றையதினம்(17) மாலை சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.இதன் போது பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதுடன் போதைப்பொருள் தொடர்பில் உறுதியான தகவல்களை பொலிஸாருக்கு வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இக்கலந்துரையாடலில் பள்ளிவாசல் நிர்வாகிகள் , அரச உத்தியோகத்தர்கள், பொலிஸ் ஆலோசனைக் குழவினர், சமூக சேவகர்கள் என பலரும் கலந்து கொண்டு தத்தமது ஆலோசனைகளை குறிப்பிட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.