• Nov 23 2024

முல்லைத்தீவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மின்சார சக்கர நாற்காலி வழங்கி வைப்பு..!

Sharmi / Oct 4th 2024, 2:04 pm
image

இடுப்புக்கு கீழ் இயங்காத மாற்றுத்திறனாளி இருவருக்கு மின்சாரத்தில் இயங்கும் சக்கரநாற்காலி இன்றையதினம்(04) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் சக்கரநாற்காலி இன்மையால் சிரமத்திற்குட்பட்டிருந்தனர். 

அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக சமூக நலனுக்காக சேவைகளை வழங்கி வரும் நோர்த் ஈஸ்ட் பீப்பிள் வெல்பெயார் அஷோசியேசன் (North East People's Welfare Association) தொண்டு நிறுவனத்தினால் மின்சார சக்கர நாற்காலிகள் திருகோணமலை , கிளிநொச்சியை சேர்ந்த இருவருக்கு இன்றையதினம் (04.10.2024) காலை ஏ9 வீதி மாங்குளம் எரிபொருள் நிலையத்திற்கு அருகாமை வைத்து வழங்கப்பட்டிருந்தது.

இந்த மின்சார சக்கர நாற்காலிகள் அன்றாட வாழ்வில் மிகப்பெரிய உதவியாக இருப்பதுடன், அவர்களின் இயல்பான செயற்பாடுகளை மிகச் சுலபமாக்குவதற்கும் முக்கிய பங்காற்றும். 

நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் இவ் நலத்திட்டத்தின் மேன்மையை பாராட்டி, சமூக சேவையில் நிறுவனத்தின் பங்களிப்பு சிறப்பானது என தெரிவித்தனர்.

நிர்வாக பொறுப்பாளர் சத்தியசீலன் சத்தியராஜ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், மாற்றுதிறனாளி அமைப்பினர்,  நிறுவன ஊழியர்கள், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், மாதர் சங்கத்தினர், பொதுமக்கள்  என  பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.


முல்லைத்தீவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மின்சார சக்கர நாற்காலி வழங்கி வைப்பு. இடுப்புக்கு கீழ் இயங்காத மாற்றுத்திறனாளி இருவருக்கு மின்சாரத்தில் இயங்கும் சக்கரநாற்காலி இன்றையதினம்(04) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகள் சக்கரநாற்காலி இன்மையால் சிரமத்திற்குட்பட்டிருந்தனர். அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக சமூக நலனுக்காக சேவைகளை வழங்கி வரும் நோர்த் ஈஸ்ட் பீப்பிள் வெல்பெயார் அஷோசியேசன் (North East People's Welfare Association) தொண்டு நிறுவனத்தினால் மின்சார சக்கர நாற்காலிகள் திருகோணமலை , கிளிநொச்சியை சேர்ந்த இருவருக்கு இன்றையதினம் (04.10.2024) காலை ஏ9 வீதி மாங்குளம் எரிபொருள் நிலையத்திற்கு அருகாமை வைத்து வழங்கப்பட்டிருந்தது.இந்த மின்சார சக்கர நாற்காலிகள் அன்றாட வாழ்வில் மிகப்பெரிய உதவியாக இருப்பதுடன், அவர்களின் இயல்பான செயற்பாடுகளை மிகச் சுலபமாக்குவதற்கும் முக்கிய பங்காற்றும். நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் இவ் நலத்திட்டத்தின் மேன்மையை பாராட்டி, சமூக சேவையில் நிறுவனத்தின் பங்களிப்பு சிறப்பானது என தெரிவித்தனர்.நிர்வாக பொறுப்பாளர் சத்தியசீலன் சத்தியராஜ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், மாற்றுதிறனாளி அமைப்பினர்,  நிறுவன ஊழியர்கள், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், மாதர் சங்கத்தினர், பொதுமக்கள்  என  பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Advertisement

Advertisement

Advertisement