• Jan 13 2025

சிறைக்கைதிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

Chithra / Jan 13th 2025, 4:04 pm
image


திருகோணமலை சிறைச்சாலையில் உள்ள சிறைக்கைதிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம் பெற்றது.

திருகோணமலை சிறைச்சாலை அத்தியேட்சகர் கவிந்திர பிரேமவன்ச தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

திருகோணமலை சிறைச்சாலையும், இலங்கை சிறைச்சாலைகள் ஐக்கியமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது.

இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட சிறைக்கைதிகள் மற்றும் மரண தண்டனை, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சிறைக்கைதிகளின் பிள்ளைகளுக்கு இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

திருகோணமலை சிறைச்சாலை நலன்புரி சங்கத்தின் தலைவர் சீ.டி. பாஸ்கரன், இலங்கை சிறைச்சாலைகள் ஐக்கிய கிழக்கு மாகாண பிராந்திய ஒருங்கிணைப்பாளர் எஸ் ரவீந்திரன், திருகோணமலை போதகர் தர்மசேன தலைவர் மற்றும் சிறைச்சாலை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 


சிறைக்கைதிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு திருகோணமலை சிறைச்சாலையில் உள்ள சிறைக்கைதிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம் பெற்றது.திருகோணமலை சிறைச்சாலை அத்தியேட்சகர் கவிந்திர பிரேமவன்ச தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.திருகோணமலை சிறைச்சாலையும், இலங்கை சிறைச்சாலைகள் ஐக்கியமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது.இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட சிறைக்கைதிகள் மற்றும் மரண தண்டனை, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சிறைக்கைதிகளின் பிள்ளைகளுக்கு இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.திருகோணமலை சிறைச்சாலை நலன்புரி சங்கத்தின் தலைவர் சீ.டி. பாஸ்கரன், இலங்கை சிறைச்சாலைகள் ஐக்கிய கிழக்கு மாகாண பிராந்திய ஒருங்கிணைப்பாளர் எஸ் ரவீந்திரன், திருகோணமலை போதகர் தர்மசேன தலைவர் மற்றும் சிறைச்சாலை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement