• Jan 09 2025

போரதீவுப்பற்றில் விசேட தேவையுடையவர்களுக்கு சுயதொழிலுக்கான நிதி வழங்கிவைப்பு..!

Sharmi / Jan 9th 2025, 9:11 am
image

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் கலாசார மண்டபத்தில் நிகழ்வு நேற்றையதினம் நடைபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேச செயலகம் மற்றும் கதிரவன் மாற்றுத்திறனாளிகள் சங்கமும் இணைந்து லண்டன் வேல்தஸ்ரோ ஸ்ரீ கற்பக வினாயகர் ஆலய அனுசரணையுடன் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், போரதீவுப்பற்று எஸ்.பகீரதன்,அகிலன் பவுண்டேசன் இலங்கைக்கான இணைப்பாளர் வீ.ஆர்.மகேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது விசேட தேவையுடையவர்களுக்கான நுளம்புவலை, சுயதொழிலுக்கான நிதி,மற்றும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் என 250குடும்பங்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வின்போது மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவர்களின் பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.






போரதீவுப்பற்றில் விசேட தேவையுடையவர்களுக்கு சுயதொழிலுக்கான நிதி வழங்கிவைப்பு. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் கலாசார மண்டபத்தில் நிகழ்வு நேற்றையதினம் நடைபெற்றது.போரதீவுப்பற்று பிரதேச செயலகம் மற்றும் கதிரவன் மாற்றுத்திறனாளிகள் சங்கமும் இணைந்து லண்டன் வேல்தஸ்ரோ ஸ்ரீ கற்பக வினாயகர் ஆலய அனுசரணையுடன் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், போரதீவுப்பற்று எஸ்.பகீரதன்,அகிலன் பவுண்டேசன் இலங்கைக்கான இணைப்பாளர் வீ.ஆர்.மகேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இதன்போது விசேட தேவையுடையவர்களுக்கான நுளம்புவலை, சுயதொழிலுக்கான நிதி,மற்றும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் என 250குடும்பங்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வின்போது மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவர்களின் பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement